மாநிலம் முழுவதும் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி மாணவர்களின் பின்னூட்டக் கருத்துகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

மாநிலம் முழுவதும் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி மாணவர்களின் பின்னூட்டக் கருத்துகள்

மாநிலம் முழுவதும் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி மாணவர்களின் பின்னூட்டக் கருத்துகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.

அவ்விவரம் வருமாறு:

அள்ள அள்ள குறையாத அறிவமுதம்

தந்தை பெரியார் அள்ள அள்ள குறையாத அறிவமுதம் அல்லவா? அவரை போற்றி அவர் வழியிலேயே செல்வோம். வகுப்பை வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை... அரு மையாக இருந்தது.

- பி.மா.வேதா, திருச்சி

வணக்கம் அய்யா. என் பெயர் இளம்வழுதி. திருச்சி. 10ஆம் வகுப்பு. மிகவும் பயனுள்ள கருத்துகள். என் போன்ற சிறார்களையும் தங்களின் பேச்சுத் திறமையால் விருப்பத்துடன் அமர வைத்து கேட்க வைத்தமைக்கு நன்றி.

-இளம்வழுதி, திருச்சி

இந்த வகுப்பு போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். பெரியாரியலின் வரலாற்றைக் கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக உள்ளேன். பெரியாரை அறிமுகப்படுத்துவது பற்றிய இன்றைய வகுப்பு அய்யா உரை மிக நன்றாக விளக்கப் பட்டுள்ளது  நன்றி.

- எஸ்.அனிதா, திருச்சி.

இந்த வகுப்பின் மூலம் அனைத்து மாண வர்களும் பெரியார் வழியில் செல்லத் தூண்டிய நம் திராவிட இயக்கத்துக்கு என்னுடைய, பகுத்தறிவு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இன்றைய வகுப்பில் கவிஞர் அய்யாவை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி எனக்கு, விரைவில் தமிழர் தலைவரை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன். நன்றி! மகிழ்ச்சி,

-சுரேந்தர், திராவிட மாணவர் கழகம்

இந்நாளில் புதியதோர் செய்தி அறிந்தேன் பெரியார் பற்றி, மேலும் பல தகவல்கள் அறிய ஆவல் கொண்டுள்ளேன்.

-ராஜேஷ் கண்ணன், இலால்குடி

இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஊக்கத்தை தருகிறது

திராவிட கருத்துகளும், பெரியாரின் சிந்த னைகளை பற்றியும் எனக்கு தெரிந்தது கடுகு அளவு தான் என்பதை இன்று தெரிந்து கொண் டேன். இன்று நடந்த வகுப்பின் மூலம் பெரியார் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆர்வமாக உள்ளது. இந்த வகுப்பானது நம்முள் மற்றும் நம் சமுதாயத்தில் பெரியார் ஆற்றிய பணி மற்றும் தற்போதும் அவரால் நாம் அனுபவிக்கும் வாழ்க்கை என்று நினைத் துப் பார்க்க வைக்கிறது. இந்த வகுப்பு எனக்கு இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஊக்கத்தை தருகிறது.

-ஜோவில்சன், நாமக்கல்

2000 ஆண்டுகளாக ஆதிக்க ஜாதியின் பிடியில், உரிமைகள் மறுக்கப்பட்டு சிக்கிக் கொண்டிருந்த நம்மை வடக்கிலே டாக்டர் அம்பேத்கரும், தெற்கிலே தந்தை பெரியாரும் போராடிப் பெற்றுதந்த சமூக நீதியை, காணொ லியின் வாயிலாக முக்கிய குறிப்புகளை பயிற்று வித்த  தோழர் கோ.கருணாநிதி அவர்களுக்கு நன்றிகள் பல.

-கே.கலாநிதி, அரக்கோணம்

இது மிகவும் பயனுடைய வகுப்புகளாக இருக்கிறது. மற்ற இடங்களில் பேசப்படாத தலைப்புகளில் உண்மையான வரலாறோடு விரிவாக விவரிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பிற்கு மிக்க நன்றி.

-சூர்யா, சென்னை

வணக்கம். தலைப்பைக் கேட்கும்போது நான் அது கடினமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பேச்சாளர் பொறுமையாக அதனை கூறும்போது அந்த தலைப்பு எளிதாக புரிகிறது. இன்றைய தலைப்பான இட ஒதுக்கீடு மிகவும் பயனுடையதாக அமைந்தது.நன்றி.

- அனன்யா, சென்னை

சமூகநீதி பற்றிய உரை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய தெளிவான  விளக்கத்தை கொடுத்த  தோழர் கோ.கருணாநிதி அவர்களுக் கும் மற்றும் இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வை ஏற்பாடு செய்த தோழர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

-ஜெ.தேவாபி, வந்தவாசி

புரட்டுகளை ஆதாரப்பூர்வமாக தகர்க்கிறது

இந்த வகுப்புத் தேடலை, இலக்கையும் தெளி வாக்கி உள்ளது. இந்த சமூகம் எதிர்கொண்ட சமமின்மையும் அதன் விளைவாய் நாம் இயல்பாய் ஏற்றுகொண்ட இழிநிலையும் என்ன என்பதை ஆதாரங்களோடு தெளிவுப் படுத்துவது இன்னும் பலம் ஊட்டுவதாய்  உள்ளது. இது எங்கள் பார்வையை சிதறடிக் காமல், எங்கள் பாதையும், கருவியும் எதுவென உறுதிப் படுத்த உதவுகிறது. நம்மை சுற்றி திரிகிற புரட்டுகளை ஆதாரப்பூர்வமாக தகர்க்கிறது.

-இளவேனில், சென்னை

முதலில் இந்த வாய்ப்புக்கு நன்றி. அருமை யான பதிவு.பல புதிய நல்ல விஷயங்களை கற்பித்ததற்கு நன்றி. வகுப்புகள் பயன் உள்ளதாக இருக்கிறது.

- எம்.கே.பவதார்

முதலில் அனைத்து தோழர்களுக்கும் மிக்க நன்றி.. இப்படிப்பட்ட ஓர் அருமையான வாய்ப்பை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஏற்படுத்தி தந்ததற்கு. இதன் மூலமாக நிறைய சமூக அறிவை பெற இயல்கிறது. மற்றும் இதன் மூலம் ஜாதியையும் பிற சமூக சீர் கேட்டையும் எதிர்த்துப் போராட முடிகிறது. இந்த திட்டத்தை உருவாக்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்..

-ஹரிணி, சென்னை

இன்றைய வகுப்பில் சமூகநீதி குறித்த வகுப்பில் மிகவும் தேவையானவற்றை மிகத் தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தது. மிகவும் ஆர்வத்தை தூண்டியது. நாட்டில் நடப்பில் முடிவான தீர்வை அறிந்துகொள்ள முடிந்தது.

- ஆர். துர்கா, சென்னை.

இந்த வகுப்பு  எனக்கு மிகவும் பயனுள்ள தாக அமைந்தது. புதிய தகவல்கள், சிந்த னைக்குரியவை. பாதுகாக்கப்பட வேண்டியவை. எப்போதும் மறக்க முடியாத வகுப்பாகும். மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்க்கத் தூண்டு கோலாக அமைந்தது.

-ஆர்.என்.ஈஷா, சென்னை

 

No comments:

Post a Comment