டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· உலகப் புலம் பெயர் தொழிலாளர்கள் அரசின் நிதி உதவித் திட்டங்கள் பெற பதிவு செய்வதற்கு ஏதுவான முறையில் ஒன்றிய அரசின் தொழிலாளர் நல அமைச்ச கத்தின் இணையம் செயல்படவில்லை. இது அரசின் மெத்தனப்போக்கையும் அலட்சியத்தையும் காட்டுகிறது என உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசை சாடியுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் அதன் அனுமதி பெறாமல் தமிழ் நாடு அரசு குழு அமைக்க முடியுமா? என்ற கேள்வியை சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
· தமிழ் நாட்டில் அனைத்து பேருந்துகளிலும் திருக் குறளுடன் திருவள்ளுவர் படம் மீண்டும் அமைக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் கண்ணப்பன் தகவல்.
தி ஹிந்து:
· இந்தியர்கள் மத சுதந்திரத்தையும் சகிப்புத்தன்மையை யும் மதிக்கிறார்கள், ஆனால் ஒருங்கிணைப்பு குறித்து பெரிதாக கருத்து இல்லை. தென்னிந்தியாவைப் பொறுத்த வரை மதத்தை விட அனைவரையும் உள்ளடக்கிய, பார்வை அதிகம் உள்ளது என
வாசிங்டனில் உள்ள பியூ ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தி டெலிகிராப்:
· இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) கடந்த வாரம் ஜோதிடத்தில் முதுகலை திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கு, "போலி அறிவியலை" ஊக்குவிப்ப தாக குற்றம் சாட்டி பல விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
· ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை மாணவர் களின் கல்வி வாய்ப்பைப் பாதிக்கும் என ஜாதவ்பூர் பல் கலைக்கழகப் பேராசிரியர் சமந்தக் தாஸ் கூறியுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment