ஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 17, 2021

ஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


சென்னை, ஜூன்17- தமிழ்நாடு முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த தும், கரோனா பேரிடர் காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதை அறிந்து கரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். முதல் முதலாக கையெழுத்திட்ட 5 உத்தரவுகளில் இதுவும் ஒன்று. முதல் தவணை யாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்து அதன்படி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2ஆம் தவணையாக ரூ.2 ஆயிரம் கலைஞர் பிறந்த நாளன்று வழங்கப்படும் என்று அறிவித்தார். கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி அன்று கரோனா நிவாரண நிதி 2ஆம் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்துடன் தி.மு.. தேர்தல் அறிக்கையில் சொல்லப் படாத 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தையும்  முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத் தின் படி நேற்று தமிழகம் முழு வதும் குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.2 ஆயிரமும், 14 மளி கைப் பொருட்களும் வழங்கப்பட் டன. ரூ.2 ஆயிரம் மற்றும் மளி கைப் பொருட்களை பெற்றுக் கொண்ட தமிழக மக்கள் மகிழ்ச் சியுடன் நியாய விலைக் கடை களை விட்டு வெளியே வந்தனர். இப்படி ரூ.2 ஆயிரம் பெற்றுக் கொண்டு வெளியே வந்த மூதாட்டிகளின் சிரிப்பு இணைய தளம், தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வெளியாகிக் கொண் டுள்ளது. ரூ.2 ஆயிரம் பெற்றதும், ‘இதைவிட வேறு மகிழ்ச்சி எங்களுக்கு இல்லைஎன்று சொல்வதைப் போன்று இருந்தது அந்த மூதாட்டிகளின் சிரிப்பு. இப்படக்காட்சிகளை அவர் மகிழ்ச் சியுடன் தனதுடிவிட்டர்பக்கத்தில் அம்மூதாட்டிகளின் புகைப்படத்தை வெளியிட்டு, “இந்த ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு”- என்று பெருமிதத்துடன் குறிப் பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment