காரைக்குடி, ஜூன்15- காரைக் குடியில் புதுப்பிக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நேற்று (14.6.2021) நடைபெற்றது. காரைக்குடி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்களின் புதுப்பிக்கப்பட்ட அலு வலகத்தை காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய அரசின் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் எம்.பி. திறந்து வைத்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்களை அவரது இருக்கையில் அமர வைத்தார். தி.மு.க. மாநில இலக்கிய அணி தலைவரும், மேனாள் அமைச்சருமான மு.தென் னவன் முன்னிலையேற்றார்.
முன்னதாக நகர காங்கிரஸ் கட்சி தலைவர் என்.பாண்டி மெய்யப்பன் அனைவரையும் வரவேற்றார். நகர காங்கிரஸ் கட்சி செயலாளர் கதி. குமரேசன் நன்றி கூறினார். தோழமை கட்சிகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment