விழுப்புரம், ஜூன் 16 விழுப்புரம் மண்டல பெரியாரியல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா 12.6.2021 அன்று மாலை அய்ந்து முப்பது மணிக்கு மண்டலத் தலைவர் கா.மு. தாஸ் தலைமையில் மண்டல செய லாளர் குழ.செல்வராசு முன்னிலை யில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். கள்ளக் குறிச்சி மாவட்ட தலைவர் சுப்ப ராயன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பரணிதரன், டாக்டர் ஜி.எஸ். குமார், மண்டல இளைஞ ரணி செயலாளர் பரிதி, மண்டல மாணவர் கழக செயலாளர் தம்பி பிரபாகரன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். 60க்கும் மேற்பட்ட மாண வர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் பகவன் தாஸ் பயிற்சி வகுப்பை ஒருங்கி ணைத்தார்.
முதல்நாள்
வகுப்பினை கழகப் பொருளாளர் வீ. குமரேசன் 'பெரியார் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் நடத்தினார். இரண் டாம் நாள் வகுப்பினை முனைவர் அதிரடி க.அன்பழகன் "பெரியாரின்
தொலை நோக்கு" என்ற தலைப்பில் நடத்தினார். வழக்குரைஞர் மணி யம்மை பகுத்தறிவும் மூட நம்பிக் கையும் எனும் தலைப்பில் மூன் றாம்நாள் வகுப்பினை நடத்தினார். 'பெரியாரும் உலக சிந்தனையாளர் களும்' என்ற தலைப்பில் பேரா சிரியர் நம் சீனிவாசன் 15.6.2021 அன்று வகுப்பெடுத்தார்.
தொடர்ந்து சிறப்பாக வகுப்புகள் நடைபெறு கின்றன. மாணவர்களிடையே புதிய எழுச்சியை வகுப்பு உண்டாக் குகிறது.
No comments:
Post a Comment