வாட்சப் பிராட்காஸ்ட்(whatsapp broadcast) என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?
கரோனா தொற்றுக் காரணமாக சென்ற ஆண்டு மார்ச் முதல் ஊரடங்கு நிலை இருந்து வருகிறது. பொதுவாக ஊரடங்கு என்பது நமக்குத் புதிய அனுபவம்.
இந்த இக்கட்டான நேரத்தில் தோழர்க ளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எந்தப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்கள்.
ஊரடங்கில் பல மடங்கு!
எப்போதும் போல காலையில் எழுந்து வெளியில் செல்வதைப் போல தயாராகி, வீட்டில் உள்ள வேலைகளைச் செய்து, பிறகு சிறிது ஓய்வுக்குப் பின்னர் இயக்க நிகழ்ச்சி களில் கலந்து கொண்டு புத்துணர்வு பெற வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
அதன் அடிப்படையில் இந்த 14 மாதங் களில் நூற்றுக்கணக்கான காணொலிக் கூட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன. அந்தக் கூட்டங்களும் பட்டிமன்றம், கருத்தரங்கு, குழந்தைகள் பழகு முகாம், மாணவர்கள் பயிற்சி வகுப்பு, பேச்சுப் போட்டி, பல்வேறு தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் உரைகள், அண்மையில் நடைபெற்ற விடுதலையின் 87 ஆம் ஆண்டு தொடக்கம் எனப் பல்வேறு வடிவங்களில் நடந்து முடிந் திருக்கின்றன.
தவிர, ஆசிரியர் அவர்களின் காணொ லிப் பேச்சுகள் நூல் வடிவம் பெறுகிறது என்றால், எந்த ஒன்றில் இருந்தும் நாம் விலகிவிடவில்லை. எல்லாமும் நடந்து கொண்டிருக்கின்றன. இயக்கம் இயங்கிக் கொண்டே இருக்கிறது.
ஆசிரியர் அவர்களின் வெற்றி!
முன்பு ஆசிரியர் அவர்கள் ஏதாவது ஓர் ஊரில் பேசுவார்கள். அங்குள்ள தோழர்கள் மட்டுமே அதைக் கேட்க வாய்ப்பிருக்கும். இன்றைய சூழலில் தமிழ்நாடே வீட்டிலிருந்து கேட்டு மகிழ்கிறது. ஏன்... வெளிநாட்டு வாழ் தோழர்களும் தமிழகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வைப் பெறுகின்றனர். அனை வரின் உடலும், மனமும் செழுமையாக இருக்க வேண்டும் என்கிற ஆசிரியரின் எண்ணம் வெற்றி பெற்றது என்பதைக் கூர்ந்து கவனித்ததன் அடிப்படையில் இங்கே பதிவு செய்கிறோம்.
அதேபோல "விடுதலை" நாளிதழ் எல் லோருக்கும் கிடைப்பதில் சிரமம் இருந்தது. அதற்கும் சென்ற ஆண்டே தீர்வு காணப் பட்டது. பொதுவாக இலாப நோக்கமின்றி செயல்படுவதுதான் விடுதலை! அதுவும் இந்த கரோனா காலத்தில் மேலும் சிரமம் என்றாலும், அதுகுறித்துக் கவலைப்படாமல் அனைவருக்கும் PDFவடிவத்தில் கிடைக்க ஏற்பாடு செய்தார் ஆசிரியர் அவர்கள்.
அதுவும் இன்றைக்குப் பெரு வெற்றி பெற்றிருக்கிறது. ஆம் தோழர்களே... நமது இயக்கத்தவர் மட்டுமின்றி, அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என பல இலட்சம் மக்களிடம் "விடுதலை" சென்று சேர்ந்திருக் கிறது. ஊரடங்கு நிலையில் இன்னும் பல மடங்கு உயர்த்தும் திட்டமும் ஆசிரியர் அவர்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் இதை விரைவுபடுத்தும் முறை குறித்து இங்கே காணலாம்!
"நியூ பிராட்காஸ்ட்" குழு என்றால் என்ன?
பொதுவாக வாட்சப் குழு குறித்து நாம் அறிவோம். ஒரு குழுவிற்கு 256 நபர்கள் இருக்கலாம். அந்தக் குழுவில் யார், யார் இருக்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். அதில் வரும் செய்திகளை அனை வருமே படிப்பதில்லை. காரணம், செய்திகள் குவிந்து காணப்படும். இதில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் செய்தியை அனுப்ப முடியாது.
இதே வாட்சப்பில் "நியூ பிராட்காஸ்ட்" (New Broadcast) என்கிற நவீன் வடிவம் ஒன்று உள்ளது. அதை எப்படி உருவாக்குவது என்பதைப் பார்க்கலாம்.
குழுவை உருவாக்கும் முறை!
வாட்சப்பைத் திறந்தால் வலது மூலை யில் மூன்று புள்ளிகள் இருக்கும். அதைத் தட்டினால் New Broadcast என்கிற வார்த்தை இருக்கும். அதையும் தட்டினால் உங்கள் பெயர் பட்டியல் (Contact Number) வரும். அதில் இருந்து 256 பேரைத் தேர்ந்தெடுத்து ஒரு குழுவை உருவாக்கலாம். இந்தக் குழுவையே New Broadcast t என்று அழைக்கிறோம்.
இந்தக் குழுவில் ஒரே ஒரு நிருவாகி மட்டுமே இருக்க முடியும். நாம் அனுப்புகிற செய்தி ஒரே வினாடியில் 256 பேருக்கும் சென்றுவிடும். ஒவ்வொருவருக்கும் நாம் தனித் தனியாக அனுப்பியது போலச் செல்லும்.
ஒரு வழிப் பாதை!
இந்தக் குழுவில் யார், யார் இருக்கிறார்கள் என யாருக்குமே தெரியாது. குழுவில் நாம் ஒருவரைச் சேர்த்தாலும் தெரியாது, நீக்கினா லும் தெரியாது. இந்தக் குழு ஒரு வழிப் பாதை போன்றது. நாம் அனுப்பிய செய்திக்கு யாராவது பதில் அனுப்பினால், அது நமக்குத் தனிப்பட்ட முறையில் தான் வரும். இந்தக் குழுவில் உள்ள யாரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாது. மின்னஞ்சலில் BCC (Blind Carbon Copy) என்ற முறையில் அனுப்புவதைப் போன்றதே இதுவும்.
சாதாரண குழுக்களில் நாம் ஒரு செய் தியை அனுப்பி, அது வேண்டாம் என்று நினைத்தால் 0.45 நிமிடத்திற்குள் அதை நாம் அழித்துவிடலாம். அதாவது நமது கைப்பேசி மற்றும் அனுப்பப்பட்டவரின் கைப்பேசி இரண்டிலும் அது அழிந்துவிடும். ஆனால், Broadcast குழுவில் அந்த வசதி இல்லை.
இந்தக் குழுவிற்கு நாம் ஒரு பெயர் வைத்துக் கொள்ள முடியும். ஆனால், Profile picture மாற்ற முடியாது. அதிலே ஒலிப்பெருக்கி (Loud speaker) போன்ற அடையாளம் இருக்கும். அதையே நாம் பயன்படுத்த முடியும்.
விடுதலை பிறந்த நாள் பரிசு!
ஆக, நம்மிடம் 512 எண்கள் இருந்தால் 2 குழுவும், 1024 எண்கள் இருந்தால் 4 குழுவும் அமைத்துக் கொள்ளலாம். (ஒரு குழுவிற்கு 256 எண்கள்) ஆக, 4 நொடிகளில் ஆயிரம் பேருக்கு அனுப்பக் கூடிய நவீன வசதிதான் இந்த New Broadcast குழு.
இந்தக் குழுவை உடன் ஏற்படுத்தி, பல இலட்சம் மக்களுக்கு 'விடுதலை'யை விரை வாகக் கொண்டு சேர்ப்போம்! 'விடுதலை' யின் 87 ஆம் ஆண்டுப் பிறந்த நாளுக்கு நாம் அளிக்கும் பரிசாக இது அமையட்டும்!
- வி.சி. வில்வம்
No comments:
Post a Comment