கும்பகோணத்தில் ஆர்.சி. வெங்கட்ராமன் என்ற பெரியவர் ஒருவர் இருந்தார். தந்தை பெரியார் அபிமானி. 1928இல் குற்றாலத்திற்குக் குடும்பத்துடன் சென்று தங்கி இருந்தார். தந்தை பெரியார் அவர்களும் அந்தக் கால கட்டத்தில் குற்றாலம் சென்று தங்கினார். ஒரு நாள் காலை குற்றாலத்தில் மத்தாளம் பாறை பாட்டையில் தந்தை பெரியார். குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன், தந்தை பெரியாரின் மாப்பிள்ளை ஆகிய மூன்று பேரும் பேசிக் கொண்டு சென்றார்கள்.
அப்பொழுது
குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன் தந்தை பெரியாரிடம் கூறினார். நமது 'குடிஅரசு' இதழுக்கு ஒரு லட்சம் சந்தாதாரர் சேரும்வரை இராமாயண ஆராய்ச்சி போன்ற கட்டுரைகளை நிறுத்தி வைப்பது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது என்று கூறினார். உடன்வந்த மாப்பிள்ளையும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு இதைப் பெரியார் ஏற்க மறுக்கிறார் என்றும் கூறினார்.
அதற்குத்
தந்தை பெரியார் புன்னகையுடன் பதில் கூறினார்.
"நான்
வருமானத்தை முன்னிட்டு பத்திரிகை நடத்தவில்லை. ஒரே
ஒரு சந்தாதாரர் மட்டும் இருந்தாலும் நான் எனது கொள்கையைத் தெரிவித்தே தீருவேன். இதுவரை ஆயிரக்கணக்கான
ஆண்டுகள் நம் மக்கள் அறியாமையில் மூழ்கி இருந்தது போதாதா" என்று 'பளிச்' சென்று பதிலளித்தார்.
(குடந்தை
ஆர்.சி. வெங்கட்ராமன் எழுதிய கட்டுரையிலிருந்து 'விடுதலை' 17.5.1959 )
No comments:
Post a Comment