ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. உறவு என்பதும் - திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழக உறவும் ஒன்றல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 18, 2021

ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. உறவு என்பதும் - திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழக உறவும் ஒன்றல்ல!

தமிழ் கேள்வி' இணைய தளத்திற்கு தமிழர் தலைவரின் பதில்கள்

சென்னை, ஜூன் 18 ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. உறவு என்பதும், திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழக உறவு என்பதும் ஒன்றல்ல என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழ் கேள்வி' இணையதள பகுதியில்...

கடந்த 12.6.2021 அன்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தமிழ் கேள்வி' இணைய தளத்திற்காகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு காணொலிமூலம் பதிலளித்தார்.

அவரது காணொலிப் பேட்டி வருமாறு:

தமிழ் கேள்வி' இணையதள நெறியாளர் செந்தில் வேல் அவர்களுடைய கேள்விக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த பதில்கள் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

யார் வரக்கூடாது?

யார் பலப்படுத்தப்படக் கூடாது என்பதில் அக்கறையாக இருக்கக் கூடியவர்கள்!

எனவேதான், எங்களுக்கு யார் வரவேண்டும் என்பதை விட, சில நேரங்களில் எங்களுடைய சிந்தனை யில், யார் வரக்கூடாது? யார் பலப்படுத்தப்படக் கூடாது என்பதில் நாங்கள் அக்கறையாக இருக்கக் கூடியவர்கள். அதிலே தொலைநோக்குப் பார்வையும் எங்களுக்கு உண்டு.

அந்தத் தொலைநோக்குப் பார்வை - ஜெயலலிதா மறைந்தவுடன் இருந்த சூழ்நிலை வேறு; ஆனால், அதற்குப் பிறகு வந்த சூழ்நிலை வேறு.

நான் அன்றைக்கு எழுதிய அறிக்கையில் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

தளபதி ஸ்டாலின் அவர்களைப் பொறுத்தவரையில், ஒரு நேர்மையான அரசியலை நடத்தவேண்டும் என்று நினைத்தார்.

மேற்கு வங்காளத்தில் பா...வினர் எப்படி ஆளுங்கட்சியிலிருந்து உறுப்பினர்களை விலைக்கு வாங்கினார்களோ, அதுபோன்று இங்கே ஸ்டாலின் அவர்கள் நினைத்திருந்தால் ஆளுங்கட்சியிலிருக்கும் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வந்தி ருக்கலாம்; ஆனால், அதுபோன்று அவர் செய்ய வில்லை. பொறுமையாகக் காத்திருந்து, எதிரணிகளை ஒன்று சேர்த்தார்; கொள்கை ரீதியான, லட்சிய ரீதியான ஓரணியாக வந்து, மக்கள் மத்தியில், மக்கள் தீர்ப்பைப் பெற்றுத்தான் இன்றைக்கு முதலமைச்சராக ஆகியிருக்கிறார்.

அன்றைய காலகட்டத்தில், ...தி.மு..வை, பா... அய்ஜாக் செய்ய விரும்பியது. அப்படி விரும் பிய நேரத்தில், அன்றைய சூழலில், அந்தக் கட்சியில் யார் தலைமையில் இருந்தால், பலமாக இருக்கும் என்ற கருத்து சொன்ன நேரத்தில், பயன்பட்ட ஒரு கருத்து அது.

அதை அவர்கள் திரிபுவாதம் செய்து, திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் திராவிடர் கழகம் யாரை ஆதரித்திருக்கிறது? எந்தக் கூட்டணியை உருவாக்கக் காரணமாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும்.

ஆக, இந்தப் பேச்சு, ஒரு வெற்றுப் பேச்சுக்குப் பயன்படுமே தவிர, ஒரு காலட்சேபத்திற்குப் பயன் படுமே தவிர, கருத்தியலுக்கு நிச்சயமாக அது உதவாது.

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போல,

ஏன் தி.. - தி.மு..வால் இருக்க முடியவில்லை?

நெறியாளர்: நீங்கள் கடுமையாக கருத்தியல் தளத்தில் எதிர்க்கக்கூடியவை பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ்., அதனுடைய தாய் இயக்கம் என்பதை பா...வே ஒப்புக்கொள்கிறது. ஆர்.எஸ்.எஸ்.தான் தீர்மானிக்கிறது பா...வின் அடுத்த தலைவர் யார் என்பதை, தி.மு..வினுடைய தாய்க்கழகமாக திராவிடர் கழகம் இருந்தாலும், தி.மு..வின் அடுத்த தலைவர் யார்? அல்லது தி.மு..வின் செயல் திட்டங்கள் என்னவாக இருக்கவேண்டும் என்பதை வழிவகுத்து அதை இயக்கக்கூடிய இடத்தில் திராவிடர் கழகம் இல்லாமல் போனது ஏன்? திராவிட இயக்கச் சிந்தனைகளை முழுமையாக செயல்படுத்தக் கூடிய இடத்திலிருந்து, தி.மு..வை அரசியல் களத்தில் இயக்குவதற்கு, இயக்க ரீதியாக, தத்துவ ரீதியாக திராவிடர் கழகத்தால், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போல, ஏன் தி.. - தி.மு..வால் இருக்க முடியவில்லை? என்கிற ஒரு கேள்வி இருக்கிறது; அல்லது அப்படித்தான் இருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. உறவு என்பது வேறு; திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழக உறவு என்பது வேறு!

தமிழர் தலைவர்: நல்ல கேள்விதான், அதை நான் வரவேற்கிறேன். அடிப்படையிலேயே இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. உறவு என்பது வேறு; திராவிடர் கழகம் - திராவிட முன் னேற்றக் கழக உறவு என்பது வேறு.

இரண்டினுடைய பரிணாம வளர்ச்சியும் வித்தியாச மானது. எப்படி என்று கேட்டால், முதலாவதாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசியல் அமைப்பு கிடை யாது; பல்வேறு அமைப்புகளை அதில் வைத்திருக் கிறார்கள்; அதில் அரசியல் வடிவம் பி.ஜே.பி.

பி.ஜே.பி.,க்கு என தொண்டர்கள் கிடையாது. ஆர்.எஸ்.எசினுடைய கொள்கையை செயல்படுத்து வதற்கு அது ஓர் அமைப்பாகும். அதனுடைய உரு வாக்கமே அப்படி அமைந்ததுதான்.

தங்களுக்கென தொண்டர்கள் - கொள்கைகளை வகுத்துக் கொண்டவர்கள்!

ஆனால், தி.மு.. என்பது அப்படி அல்ல. திராவிடர் கழகத்திலிருந்து அவர்கள் வெளியே வந்து, அரசியல் பிரிவாக செயல்பட்டு, பல நேரங்களில் திராவிடர் கழகத்தையும் தாண்டி நின்று, தனியே அவர்கள் தங்களுக்கென தொண்டர்கள், தங்களுக்கென அமைப் புகள், கொள்கைகள் என்று வகுத்துக் கொண்ட நேரத்தில்,

எனவேதான், தாய் - பிள்ளை உறவு என்பது எப்பொழுதுமே பிரித்துவிட முடியாத ஒன்று.

தாய்க்கழகம் என்று நாங்கள் சொல்கிறபொழுது, அடிப்படைக் கொள்கைகளிலே அவர்கள் மாற வில்லை.

ஒரு சில திட்டங்களை அவர்கள் வகுத்திருக்கலாம். கடவுள் நம்பிக்கை போன்றவை திட்டங்கள்தான் அவை கொள்கைகள் அல்ல.

ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூகநீதி இவையெல்லாம் லட்சியங்கள்.

ஆகவே, அவர்களுடைய உருவாக்கம் என்பது வேறு. திராவிடர் கழகம் அதை உருவாக்கியிருந்தால், எங்களுடைய கண்ட்ரோலிலேயே வைத்திருக்கலாம். நாங்கள் அதை உருவாக்கவில்லை.

எங்களைமீறி அவர்கள் தனியே போய் தான் ஓர் அமைப்பை உருவாக்கினார்கள். ஆனால், பிறகு தாய்க் கழகத்திடம் அவர்கள் வந்து, ‘‘ஆட்சியையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை ஆக்குகிறோம்'' என்று அண்ணா அவர்கள் சொன்னார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதத்தில் அண்ணாவின் உரை!

அதுமட்டுமல்ல, அண்ணா அவர்கள் நாகரசம்பட் டியில் நடைபெற்ற பள்ளிக்கூட நிகழ்வில் உரை யாற்றும்பொழுது சொன்னார்கள்,

‘‘இப்பொழுது நான் வகிக்கும் பதவியில் எனக்கு முழு அதிகாரம் கிடையாது. எனவே, முடிந்தவரை செய்வேன்.

எனவே, அய்யா அவர்களே நான் பழையபடி உங்களோடு சேர்ந்து அந்தப் பணியை செய்யவா? அல்லது இப்பொழுது செய்கின்ற பணியையே தொடரவா? நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன்'' என்று பகிரங்கமாக முதலமைச்சர் அண்ணா அவர்கள் பேசினார், ஆட்சிப் பொறுபேற்ற ஆறு மாதத்தில்.

பெரியார், மகிழ்ச்சியடைந்து, ‘‘இதுவரையில் எத்தனையோ கட்சிகளை நாம் ஆதரித்திருக்கிறோம்; ஆனால், சுயமரியாதைத் திருமணம் சட்டத்தை நிறை வேற்றக் கூட அவர்கள் தயாராக இல்லை. அரசியல் ரீதியாக - அதில் எத்தனையோ இடர்ப்பாடுகள் இருக்கின்றன; சட்டங்கள் நிறைய இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இந்த ஓர் இயக்கம் அந்தக் கொள்கைகளை நிறைவேற்றி இருக்கிறது'' என்று கூறினார்.

பெரியாரைப் பொறுத்தவரையில் முடிந்த அளவிற்கு வேலை வாங்குவதுதான் அவருடைய பணி எந்த அரசாங்கமாக இருந்தாலும்; அதுவும் இந்த அரசாங்கம் நம்முடைய அரசாங்கமாக அமைந்துவிட்டால், இன் னும் நல்லது அல்லவா!

வெற்றிக் கனியை பெரியாருடைய காலடியில் வைக்கிறேன் என்று சொன்னார்

பிரிந்து போன பிள்ளைகளே திரும்பவும் வந்தார்கள்; தாயை நோக்கித்தான் திரும்ப வந்தார் அண்ணா அவர்கள். அவருடைய வெற்றிக் கனியை பெரியாருடைய காலடியில் வைக்கிறேன் என்று சொன்னார்கள். வழிநடத்துங்கள் என்று சொன்னார்கள். பெரியார் அவர்களும் வழிநடத்தினார்.

அண்ணா மறைந்தவுடன், கலைஞர் முதலமைச் சராக வரவேண்டும் என்பதிலும் பெரியார் வழி காட்டினார். அதற்குப் பிறகு பல சந்தர்ப்பங்களிலும் பெரியாருடைய கருத்து என்ன என்று கேட்டார்கள்.

கலைஞர் அவர்கள், பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தபொழுது, திராவிடர் கழகம் எதிர்த்தது என்பது உங்களுக்குத் தெரியும்.

அந்தக் கூட்டணியிலிருந்து வெளியே வந்ததும், ‘‘நெய்வேலி தீர்மானம் நெய் மணக்கிறது'' என்று அவர் எழுதினார்.

ஆகவே, எங்களுடைய உறவு என்பது தாய் - பிள்ளை உறவு என்பது பொதுவானது. இடையில் ஏற்படுகின்ற உரசல் என்பது நிலையற்றது - அது ஒரு தற்காலிகமானது; தானே அழிந்து போகக்கூடியது.

‘‘என்னுடைய முடிவுகளை தீர்மானிப்பது பெரிதும் பெரியார் திடலாகத்தான் இருக்கும்!''

அதற்குப் பிறகு பார்த்தீர்களேயானால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பதவியை தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக்கொண்டபொழுது ‘‘என்னுடைய முடிவுகளை தீர்மானிப்பது பெரிதும் பெரியார் திடலாகத்தான் இருக்கும்'' என்றார்.

இரண்டு பேரும் பிரிந்து இருக்கவேண்டும் என்று பல பேர் முயற்சித்தார்கள். சில வட்டாரங்கள் குறிப்பாக ஆரிய வட்டாரத்தைப் பொறுத்தவரையில், ‘‘நீங்கள் திராவிடர் கழகம் பக்கம் போகாதீர்கள்; வீரமணி பக்கம் போகாதீர்கள்'' என்று சொல்லிப் பார்த்தார்கள்.

இல்லை, இல்லை; பெரியார் திடல்தான் எங்களை முடிவு செய்யும் என்று தளபதி ஸ்டாலின் அவர்கள் உறுதியாகப் பிரகடனப்படுத்துவதைப்போல சொன் னார்.

தாய் - பிள்ளை உறவு என்பது

கொள்கை உறவு - அரசியல் உறவு அல்ல!

எனவே, இந்தத் தாய் - பிள்ளை உறவு இருக் கிறதே, இது கொள்கை உறவு - அரசியல் உறவு அல்ல.

இரண்டாவதாக, நாங்கள் உருவாக்கி வந்த வர்கள் அல்ல; எங்கள் தொண்டர்களை வைத்து அவர்கள்இயக்கத்தை நடத்தக்கூடியவர்கள் அல்ல; அவர்களுக்கென்று தனித் தொண்டர்கள் உண்டு. பலமான அமைப்பும்கூட!

ஆகவே, பி.ஜே.பி. அப்படிப்பட்ட அமைப்பு அல்ல. தொண்டர்கள் வேண்டும் என்றால், வேலை செய்யவேண்டும் என்றால், கொள்கை வேண்டும் என்றால், அவையெல்லாம் ஆர்.எஸ்.எஸிடமிருந்துதான் வரவேண்டும்.

ஆனால், தி.மு..வுக்கு அப்படியல்ல. கொள்கை, லட்சியங்களில் நாங்கள் ஒன்றுபட்ட வர்களே தவிர, தாய் - பிள்ளை உறவுதான்.

இருந்தாலும், புகுந்த வீடு வேறு; தாய் வீடு என்பது வேறு. ஆனால், ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.யைப் பொறுத்தவரையில், புகுந்த வீடு கிடையாது; பிறந்த வீடும், புகுந்த வீடும் இரண்டும் ஒன்றுதான் - இதுதான் அதனுடைய அடிப்படை.

நீட்டிலிருந்து விலக்குப் பெறுவதற்கான வாய்ப்புகள் நம்முன் என்ன இருக்கின்றன?

நெறியாளர்: 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் உங் களுடைய பங்களிப்பை நான் சுட்டிக்காட்டியிருந்தேன். இப்பொழுது இரண்டு பிரச்சினைகள் பிரதான பிரச் சினையாக இருக்கின்றன. ஒன்று, நீட்டிலிருந்து தமிழ கத்திற்கு விலக்குப் பெறுவது; இன்னொன்று ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது. மேற்கண்ட இரண்டையும் சாத்தியப்படுத்தும் இந்த அரசு என் பதை அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் சொல்லியி ருந்தார்கள். குறிப்பாக நீட்டிலிருந்து விலக்கு வாங்கித் தருவோம் என்று தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தார்கள்.

சட்ட ரீதியாக எப்படி சாத்தியப்படுத்துவீர்கள் என்பதைச் சொல்லுங்கள் என்கிற கேள்விகள் இன்று பொது வெளியில் எழத் தொடங்கியிருக்கின்றன.

சட்ட ரீதியாக நீட்டிலிருந்து விலக்குப் பெறுவதற்கான வாய்ப்புகள் நம்முன் என்ன இருக்கின்றன? ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் என்னவாக இருக்கின்றன?

தமிழர் தலைவர்: 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து என்பது எதுவும் கிடையாது.

69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்தை உரு வாக்குவதற்கு வேறு வகையில் முயற்சிக்கிறார்கள். இட ஒதுக்கீட்டையே எதாவது செய்ய முடியுமா? என்று பார்க்கிறார்கள்.

ஒரே ஒரு சாக்கை சொல்லுகிறார்கள், குழப்புவதற் காக.

69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் அடிப்படைக் கட்டுமானத்திற்கு விரோதமானதல்ல!

9 ஆவது அட்டவணை பாதுகாப்பு என்பதால், 69 சதவிகித இட ஒதுக்கீடு பத்திரமாக இருக்கிறது.

அப்படி இருந்தாலும் வழக்குப் போடலாம் என்றால், எத்தகைய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்படும் என்றால், எந்தெந்த இடத்தில், அடிப்படைக் கட்டுமானத்திற்கு விரோதமாக உள்ளதோ அவைதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று ஏற்கெனவே தீர்ப்புகள் வந்திருக்கின்றன.

69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் என்பது அடிப்படைக் கட்டுமானத்திற்கு விரோதமானதல்ல.

ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் - இந்த சட்டம் வந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆகின்றது.

ஜஸ்டீஸ் .கே.இராஜன் தலைமையில் குழு!

இரண்டாவதாக, நீட் தேர்வைப் பொறுத்தவரையில், சட்ட ரீதியாக அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்காகத்தான், ஜஸ்டீஸ் .கே.இராஜன் அவர்கள் தலைமையில், 8 பேர் கொண்ட குழுவை இப்பொழுது புதிதாக அமைந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைத்திருக்கிறது.

நீட் தேர்வு என்பது சட்டப்படியே செல்லாத ஒன்று. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்பதை சட்ட ரீதியாகவே எடுத்துச் சொல்லக்கூடிய கருத்துகளை அந்தக் குழு சொல்ல இருக்கிறது. இன்னும் ஒரு மாத கால அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். அதில் அந்த நுணுக்கங்கள், மற்றவைகள் எல்லாம் வெளிவர இருக்கின்றன; ஆகவே, அதைப்பற்றி இப்பொழுது விரிவாக விவரிக்கவேண்டிய அவசியமில்லை.

அதற்கு மாற்று வழி என்ன என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள், சொல்லுவார்கள். அதன் படி நடப்பதற்கு, அரசாங்கத்திற்கு வழிகாட்டக் கூடிய தன்மையில்  அது இருக்கும்.

நீட் தேர்வு என்பது ஊழலுக்கு அப்பாற்பட்டதல்ல - ஆள்மாறாட்டங்கள் நடந்திருக்கின்றன!

நீட் தேர்வுக்கு விலக்கே கொடுக்க முடியாதது என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே, விலக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல, நீட் தேர்வு என்பது ஊழலுக்கு அப்பாற்பட்டது, அதற்காகத்தான் அதனைக் கொண்டு வந்திருக்கின்றோம் என்று சொல்வதற்கு இடமில்லாத அளவிற்கு, ஆள்மாறாட்டங்கள் நடை பெற்று இருக்கின்றன.

எனவேதான், எந்த நோக்கத்திற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதோ, அது நிறைவேறவில்லை என்பதை நாம் தெளிவாக, சட்ட ரீதியாக நீதிமன்றங் களுக்கு முன்னாலே சொல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே, இப்பொழுது அமைக்கப்பட்டு இருக்கின்ற நீதிபதி .கே.இராஜன் அவர்களின் தலைமையில் அமைந்த குழு தெளிவாக அறிக்கை கொடுக்கவிருக்கிறது. ஆகவே, அதனுள் விரிவாகப் போகவேண்டிய அவசியமில்லை.

எழுவர் விடுதலையைப் பொறுத்தவரையில், இப்பொழுது இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கும்,  முதலமைச்சர் அவர்களுக்கும் மிகுந்த அக்கறை உண்டு. ஏற்கெனவே அவர்கள் ஒப்புக்கொண்ட ஒரு கொள்கை. அதற்காக கடிதமும் எழுதியிருக்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தின்

163 ஆம் பிரிவை பயன்படுத்தினால்...

அதையும் தாண்டி, அதற்கு என்ன பதில் வருகிறது  என்பதைப் பொறுத்து, அரசமைப்புச் சட்டத்தில் இருக் கின்ற 163 ஆவது பிரிவைப் பயன்படுத்தி - நிச்சயமாக அந்த முடிவை எடுப்பதற்குத் தயாராக இருப்பார்கள் என்று நினைக்கிறோம். அதற்கு வேண்டிய ஆயத் தங்களையும், அழுத்தம் கொடுப்பதற்கும் எங்களைப் போன்றவர்கள் தயாராக இருப்போம்.

ஆகவே, நல்ல முடிவு வரும், நிச்சயமாக!

தொடக்கம் என்றால் முடிவு உண்டு -

இரவு என்றால் விடியல் உண்டு!

நன்றி!

வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நெறியாளர் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

No comments:

Post a Comment