பகோடா விற்கலாமே!
* கடந்த ஏப்ரலில் நாட்டில் வேலையின்மை 8 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
>> உங்களுக்கு வேறு வேலையில்லையா? என்று மத்திய அரசு கேட்டாலும் கேட்கக் கூடும்.
இதில் என்ன ஆச்சரியம்?
* கான்பூரில் பா.ஜ.க. தலைவர் பிறந்த நாளில் குற்றவாளிப் பட்டியலில் உள்ள ரவுடி பங்கேற்பு.
>> ரவுடிகள் பா.ஜ.க.விலேயே சேர்ந்து விட்ட பிறகு, கட்சியின் தலைவர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க மாட்டார்களா?
மனிதநேயம்
* மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம்.
- தமிழ்நாடு அரசு ஆணை
>> சதா மக்கள் நலச் சிந்தனைதான்!
'பேசாமலிருப்பதே உத்தமம்!'
* தேசிய கல்விக் கொள்கையை பகுத்தறிவுச் சிந்தனையுள்ள தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்.
- முன்னாள் துணைவேந்தர் பா. குருசாமி
>> பகுத்தறிவு சிந்தனை இருப்பதால்தான் தமிழ்நாடு அரசு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. பகுத்தறிவு பற்றி எல்லாம் பாலர்கள் பேச வேண்டாம்.
டியூப் சாராயமோ!
* யூ-ட்யூப்பை பார்த்து சாராயம் காய்ச்சிய தொழிலாளி கைது!
>> இவைகளுக்கெல்லாம்கூட விஞ்ஞானம் பயன்பாடோ!
No comments:
Post a Comment