"பெரியாரியல் பயிற்சி வகுப்பு"
(காணொலி வழியாக)
பேரன்புடையீர் வணக்கம், திராவிட சமுதாயம் மானத்தோடும், அறிவோடும் வாழவும் கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளைப் பெறவும் வாழ்நாள் முழுவதும் போராடி தன் வாழ்நாளிலேயே வெற்றிகண்ட தந்தைபெரியாரை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கோடும், மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், நமது சமுதாயம் கடந்து பாதையை அறிந்து கொள்வதற்கும் வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் தஞ்சை ந.பூபதி பெரியார் படிப்பகமும் இணைந்து "பெரியாரியல் பயிற்சி வகுப்பு" காணொலி வாயிலாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
2021 ஜூன் 7ஆம் தேதி தொடங்கி 15 நாள்கள் வகுப்புகள் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் 7.15 வரை நடைபெறும், 45 நிமிடங்கள் வகுப்பும்
30 நிமிடங்கள் மாணவர்களின் கேள்விக்கு பதில் என்ற முறையில் அமைக்கப்படும்.
கழக மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளாகள் தங்கள் பகுதியில் உள்ள புதிய மாணவர்கள், இளைஞர்களை தேர்வு செய்து
பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க முன்பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முன்பதிவு செய்ய கடைசி நாள் ஜூன்-5, 75 நபர்களுக்கு மட்டும் அனுமதி. புதியவர்களுக்கு முன்னுரிமை
தொடர்புக்கு:
பேரா.நம்.சீனிவாசன் -94423 61954
இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்
இரா.வெற்றிக்குமார் -97861 18709, செயலாளர், ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், தஞ்சை
நூலகர் நெல்லுப்பட்டு வே.இராஜவேல் - தஞ்சை - 97873 47010.
No comments:
Post a Comment