உலகில் ஒரே பகுத்தறிவு நாளேடு!
மனமார்ந்த
வாழ்த்துகள்!
அனைவருக்கும்
கொண்டு சேர்க்க வேண்டும்!
பெரியாரின்
சிந்தனை தமிழகத்தின் மக்களின் கல்வி, அறிவு வளர்ச்சி, சமூகநீதி
சிந்தனை, பண்பாடு
போன்றவை தொடர்பான அனைத்துத்
துறைகளிலும் தமது
பங்க ளிப்பைத் தருவது 'விடுதலை' நாளேடு.
இந்த 'விடுதலை' நாளேடு தமிழ்நாடு மட்டுமல்ல. உலக அளவில் நம் உரிமைகளுக்கான குரலை ஒலிக்கிறது.
நாம்
சமூக நீதிக் களத்தில் சிந்திக்கவும், செயல்படவும் ஊக்குவிக்கும் நாளேடு.
நெடுங்காலத்திற்கு
முந்தைய தந்தை பெரியாருடைய சிந்தனைகள், அம்பேத்கருடைய சிந்தனைகள் பேரறிஞர் களின் எழுத்துகளை இளையத் தலைமுறைக்கு வழங்குகிறது.
பல்துறை
அறிஞர்களால் தற்கால சமூக அரசியல் பிரச்சினைகள் தொடர்பான கட்டுரைகள் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. .
ஜாதி
ஒழிப்பு, கோயில் தீண்டாமை ஒழிப்பு, பெண்ணு ரிமை, சமூக சமத்துவம் உள்ளிட்ட அனைத்து களங்களிலும் தொண்டாற்றி வருகிறது.
மதத்தில்,
அரசியலில் சமூகத்தில் அடிமையாக எப்படி நாம் இருக்கிறோம் என்பதைப் பற்றியும், அதில் நாம் எப்படி வெளிவர வேண்டும் என்பதை பற்றியும் அறிந்து கொள்ள இந்த 'விடுதலை' நாளேட்டை தொடர்ந்து படிக்க வேண்டும்.
மாணவர்களும்,
இளைஞர்களும், பெண்களும், உழைக்கும் மக்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் விடுதலை நாளேடுதான்.
திராவிடர்
கழகம் என்ற அமைப்பை பற்றி மட்டும் எழுதுவதில்லை, எல்லா செய்திகளையும் தாங்கி வரும் நாளேடு. திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
மிகுந்த பணிச் சுமையோடு சேர்த்து இதனை நடத்துகிறார். பெரியார் திடலில் வேலை செய்யும் தோழர்களும் மிகக்கடுமையான உழைப்பை தந்து
கொண்டிருக்கிறார்கள்.
மிகுந்த பாராட்டுக்குரியது அவர் களுடைய உழைப்புக்கு மிகுந்த மனமார்ந்த வாழ்த்துகள்.
அனைவருக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துகள்.
பெரியாரின்
சிந்தனை ஓங்குக! சமூகநீதி வெல்க!
'விடுதலை'
நாளேடு தொடர்ந்து கொண்டு வர வேண்டும். அனைவரும்
படிக்கவேண்டும் பகிர வேண்டும்.
- வா.ரங்கநாதன் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்
'விடுதலை'
நாளேடு வாசகர்
- - - - -
'விடுதலை' ஓர் ஏடு அல்ல - அது ஓர் இயக்கம்!
87 ஆம்
ஆண்டில் எடுத்து வைக்கும் விடுதலை ஏட்டை ஆதரிக்கிறோம். இன்றைய நவீன கால கட்டத்திலேயே பார்ப்பனியம் எல்லா துறைகளிலும் எப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். அன்றைய
காலகட்டத்தில் பார்ப்பனியம் எப்படி எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி இருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
பார்ப்பனியம்
எப்படி எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி கைப்பற்றுகிறது என்பதை
புள்ளி விவரங்களோடு வெளியிட்டு பார்ப்பனரல்லாத மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை எல்லாத் துறைகளிலும் பெற்றுக் கொடுத்தது விடுதலை ஏடு. பார்ப்பனரல்லாத மக்களை அரசியல் படுத் தியதிலும், பிராமணர் அல்லாத மக்களுக்கு சுயமரியாதை சமதர்ம உணர்வூட்டியதிலும், முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தின் மாபெரும் உந்துசக்தியாக இருந்த திலும் விடுதலையின் பங்கு அளப்பரியது.
வடநாட்டு
மார்வாடி கடை மறியல், பிராமணாள் கஃபே எதிர்ப்புப் போராட்டம், விநாயகர் சிலை உடைப்பு, ராமன் படம் எரிப்பு.... என அனைத்துப் போராட்டங்களையும்
மக்கள் மயமாக்கி பல்லாயிரக்கணக்கான மக்களை அணி திரட்டியது விடுதலை ஏடு. பார்ப்பனியம் புரட்சியாளர் அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள் அடக்கி " தாழ்ந்த ஜாதியாக்கியது. 'விடுதலை'யோ புரட்சியாளர் அம்பேத்கரை
"உலக மேதை" ஆக்கியது.
- கா.இரா தமிழரசன், தமிழ்தேச குடியரசு இயக்கம்
No comments:
Post a Comment