பொதட்டூர்பேட்டை கணேசன் 81 ஆவது பிறந்த நாள் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

பொதட்டூர்பேட்டை கணேசன் 81 ஆவது பிறந்த நாள் வாழ்த்து

வடலூர் உலக மய்ய முதியோர் இல்லத்தில் பொதட்டூர்பேட்டை மூத்த தோழர் கணேசனின் பிறந்தநாள் விழா  15.6.2021 நண்பகல் வி.எம். சூரியமூர்த்தி தலைமையில் வடலூர் தி.. தலைவர் புலவர் சு. ராவணன் முன்னிலையில் நடந்தது. கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் பயனாடை போர்த்தி சிறப்புச் செய்தார். தோழர் கணேசனின் தொண்டினைப் பாராட்டிப் பேசினார். மாவட்டத் தலைவர் தண்டபாணி,  மாவட்ட அமைப்பாளர் மணிவேல்,  நகர செயலாளர் குணசேகரன்,  நூலகர் ராஜேந்திரன்,  தீன மோகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன்,  மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் ரேவந்த் ஆண்டனி ஆகியோர் வாழ்த்துக் கூறினர். கணேசன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 1000 கழகப் பொதுச் செயலாளரிடம்  வழங்கினார். கணேசனுக்கு பிறந்த நாள் மகிழ்வாக  கேக் வெட்டி கொண்டாடப்பட்டது . முடிவில் ராமலிங்கம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment