மத்திய அரசின் வரிக்கொள்கையால் தமிழக அரசுக்கு வர வேண்டிய ரூ.80,000 கோடி வருவாய் இழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 20, 2021

மத்திய அரசின் வரிக்கொள்கையால் தமிழக அரசுக்கு வர வேண்டிய ரூ.80,000 கோடி வருவாய் இழப்பு

 நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல்

மதுரை, ஜூன்20 மத்திய அரசின் வரிக்கொள்கை யால் தமிழக அரசுக்கு ரூ.80 ஆயிரம் கோடி வரு வாய் இழப்பு ஏற்பட்டுள் ளதாக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித் தார்.

தமிழக வணிகவரித் துறை சார்பில் மதுரை மண்டல வணிகர்களுட னான ஆலோசனைக் கூட்டம் 18.6.2021 அன்று மதுரை மாவட்ட ஆட் சியர்  அலுவலகத்தில் நடந் தது.  கூட்டத்திற்கு வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்து பேசும் போது, ‘‘முதல்வரின் உத்தரவின் பேரில் 11 ஆண்டுகளுக்கு பிறகு வணிகர்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் கருத்து களைக் கேட்டு, புகார்கள், குறைகள் நிவர்த்தி செய் யப்படும். விரைவில் இத் துறை சார்பில் கட்டுப் பாடு அறை திறக்கப்பட உள் ளது. கடந்தாண்டு வணிக வரித்துறை மூலம் ரூ.96 ஆயிரம் கோடியும், பத் திரப்பதிவு மூலம் ரூ.10 ஆயிரம் கோடியும் மட் டுமே அரசுக்கு வருமானம் கிடைத்தது. வணிகம் செய்வோர் இடையூ றின்றி வணிகம் மேற் கொள்ளலாம். முதலீ டின்றி, உற்பத்தி  மற் றும் விற்பனையாளர் களுக்கு இடையே இடைத்தர கர்கள் போல் செயல்படு வோர்மீது உரிய நடவ டிக்கை எடுக் கப்படும்’’ என்றார்.

கூட்டத்தில், நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்துப் பேசும்போது, ‘‘மத் திய அரசின் வரிக் கொள் கையால் மாநில அரசுகள் சுய வருமா னத்தை இழந்து விட்டன. தமிழகம் 4 சத வீதத்தை இழந்துள்ளது.  இது மொத்தம் ரூ.80 ஆயிரம் கோடியாகும்.  கரோனா நிவாரண நிதி கொடுத் ததால் ரூ.9 ஆயிரம் கோடி செலவு, பெண்கள் இலவச பேருந்து பயணத் தால் ரூ.1,200 கோடி செலவு இவை யெல்லாம் அரசுக்கு ஒரு இழப்பே கிடையாது. டாஸ்மாக்கில் வரும் ரூ.35 ஆயிரம் கோடியை வைத்து தான் தமிழக அரசு இயங் குவதாகக் கூறுகின்றனர்.

மாநில அரசுக்கு வர வேண்டிய ரூ.80 ஆயிரம் கோடி வருமானம், மத்திய அரசிடமிருந்து வந்தால் எதற்காக டாஸ்மாக் வரு மானம்?  நல்ல மேலாண்மை, கொள்கைக்காக, அடிப் படை தத்துவத்திற்காக, சமூக நீதிக்காக நாம் இருக்கும்போது, குறுக்கு வழியில் செல்ல வேண்டிய அவசியமில்லை. சட்ட மைப்பின்படி நேரடி வரிவிதிப்பு எல்லாம் ஒன்றிய அரசிடம் குவிந்துள்ளது. மாநில அரசிடம் அந்த உரிமை இல்லை. மறைமுக வரியை வைத்துதான் அரசு நடத்த வேண்டியுள் ளது. நேர்முக வரியாக 52 சதவீதம், மறைமுக வரியாக 48 சதவீதம் என இருந்தது. ஒன்றிய அரசு, நேர்முக வரியை 60 சத வீதமாக உயர்த்திவிட் டது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கு கிறது. விரைவில் திருத்தப் பட்ட வரவு -_ செலவு அறிக்கை தாக்கல் ஆகும். வணிகர்களுக்காக பல நல்ல முடிவுகளை முதல்வர் அறிவிப்பார்’’ என்றார்.


No comments:

Post a Comment