சிறீவஸ்தவா விவகாரத்தில் பிரதமரின் ‘ஜி - 7’ மாநாட்டு பேச்சுக்கு முரணாக குறிவைக்கப்படும் பத்திரிகையாளர்கள்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 18, 2021

சிறீவஸ்தவா விவகாரத்தில் பிரதமரின் ‘ஜி - 7’ மாநாட்டு பேச்சுக்கு முரணாக குறிவைக்கப்படும் பத்திரிகையாளர்கள்...

இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம் கண்டனம்

புதுடில்லி, ஜூன் 18 ‘ஏபிபி கங்காசெய்தித் தொலைக் காட்சியில் பிரதாப்கர் மாவட்டச் செய்தி யாளராக பணியாற்றி வந்தவர் சுலாப் சிறீவஸ்தவா. இவர் கடந்த    13.6.2021 அன்று சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், வஸ்தவாவின் மரணத்தில் பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் செயல் படும் மதுபான மாபியாவுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பின்னணியில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக சிறீவஸ்தவா இரண்டு நாள்களுக்கு முன்புதான் பிரதாப்கர் மாவட்டகாவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.

பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள மதுபான மாஃபியாவுக்கு எதிரான எனது செய்தி ஒன்று ஜூன் 9-ஆம் தேதி எங்களது தொலைக்காட்சி அலைவரி சையில் வெளியானது. இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் பின்னர் என்னை சிலர் பின் தொடர்வதாகத் தெரிகிறது. எனது செய்தியில் குறிப்பிட்ட மதுபான மாபியாக்கள் என்னை பழிவாங்க அலைகிறார்கள் என சந்தேகிக்கிறேன். இதனால் எனது குடும்பத்தினரும் மிகவும் கவலையடைந்துள்ளனர்'' என்று அந்தப் புகாரில் சிறீவஸ்தவா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சிறீவஸ்த வாவின் மரணத்தை முன்வைத்து, இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சீமா முஸ்தபா, பொதுச் செயலாளர் சஞ்சய் கபூர் மற்றும் பொருளாளர் அனந்த் நாத் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், பிரதமர் மோடிஜி7’ மாநாட்டில் பேசிய ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை ஆகிய முழக்கங்களுக்கு முரணாகவே நாட்டில் அனைத்தும் நடப்ப தாகவும், அரசாங்கத்தை விமர்சிக் கும் பத்திரிகையாளர்கள் குறி வைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

''கரோனா தொற்று விவகா ரத்தில் அரசாங்கங்கள் கூறும் அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்று ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு, ஒன்றிய அரசும், பல மாநில அரசாங்கங்களின் நிர்ப்பந்தம் அளித்துவரும் நேரத்தில் சிறீவஸ் தவாவின் மரணம் நடந்துள்ளது.

மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இதே காலத்தில்தான், பத்திரிகை யாளர்களை கைது செய்ய நியாய மற்ற முறையில் தேசத்துரோகம் மற்றும் யுஏபிஏ போன்ற சட்டங் களை ஆட்சியாளர்கள் பயன் படுத்துகின்றனர்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் கார்ட்டூனிஸ்டுகள்சமூக ஊடகங்களில் குறிவைக்கப்படு கிறார்கள்.

கேதார்நாத் வழக்கை குறிப் பிட்டு, அண்மையில் பத்திரிகை யாளர் வினோத்துவா வழக்கில் உச்சநீதிமன்றம் வழிகாட்டிய பிறகும், இந்த நாட்டின் சட்டத் தை மீறுகிறார்கள் என்று பத்திரி கையாளர்கள் குற்றம் சாட்டப்படு கின்றனர். இவை அனைத்தும் ஜி -7 உச்சி மாநாட்டில் சர்வாதி காரத்திற்கு எதிராக ஜனநாயகம் வளர்த்தெடுப்பது, வெளிப் படைத்தன்மையைக் கடைப் பிடிப்பது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியவற்றுக்கு முரணாக உள்ளது'' என்று பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment