தினசரி கரோனா தொற்று 62,224 ஆக சரிவு: சிகிச்சையில் உள்ளோர் 8,65,432 ஆக குறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

தினசரி கரோனா தொற்று 62,224 ஆக சரிவு: சிகிச்சையில் உள்ளோர் 8,65,432 ஆக குறைவு

புதுடில்லி,ஜூன்16- நாடுமுழுவதும் தினசரி கரோனா தொற்று 62,224 குறைந்துள்ளது. சிகிச்சையில் உள் ளோர் எண்ணிக்கை 8,65,432ஆக குறைந்தது. கரோனா 2ஆவது அலை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கி யுள்ளது.

எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்கு முகத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 62,224ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளி விவரங்களை ஒன்றிய சுகாதார அமைச் சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,96,33,105, கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,224, இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,83,88,100, கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,628, கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3,79,573, கடந்த 24 மணிநேரத்தில் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 2,542, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,65,432 ஆக உள்ளது.

No comments:

Post a Comment