51ஆம் ஆண்டு பிறந்த நாளில் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மதச் சார்பின்மை, சமூக நீதி மற்றும் முற்போக்குக் கருத்துக் களை ஏற்று, பெரும் ஈடுபாடு காட்டி வரும் முக்கிய தலைவராக விளங்கிடும் தாங்கள், கடந்த சில ஆண்டுகளாக நாடு அடைந் துள்ள சரிவுகளை, சரி செய்திட - சமூக, பொருளாதார தளங்களில் உரிய பங்கினை ஆற்றிட வேண்டும். இந்த அருமையான பணியினை மேற்கொண்டு சங்பரிவாரங் களுக்கு எதிராக தேசிய, மாநில அரசியல் கட்சிகள் அனைத்தையும் நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைத்துப் பணியாற்றி நல்ல உடல் நலத்துடன் இருந்திட விரும்புகிறோம்.
வயதில் அரை நூற்றாண்டு காலத்தை நிறைவு செய்து, வர இருக்கும் அடுத்த அரை நூற்றாண்டு காலத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் இந்த நாளில் தங்களது சமூக, அரசியல் பணி வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
நன்மதிப்புடன்....
அன்புடன்
தலைவர்
சென்னை
19.6.2021
No comments:
Post a Comment