அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூன் 1 சென்னை வர்த்தக மய்யத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைக ளுடன் கூடிய 504 படுக்கை வசதி கொண்ட கோவிட் சிகிச்சை மய்ய இரண்டாம் பிரிவினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி நேற்று (31.5.2021) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்த சிகிச்சை மய்யத்தில் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குறைந்த அளவு ஆக்சிஜன் இணைப்புடன் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நபர்கள் மருத்துவ மனையின் அறிவுறுத்தலின்படி இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
வர்த்தக மய்யத்தின் 2ஆவது பிரிவில் 504 படுக்கைகளுடன் கோவிட் சிகிச்சை மய்யம் தயார்நிலையில் உள்ளது. இதில், 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு பொது மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்களின் பரிந்துரையின்படி அல்லது மாநகராட்சியின் முதற்கட்ட உடற்பரிசோதனை மய்யங்களில் உள்ள மருத்துவர்களின் பரிந்துரையின்படி மட்டுமே இங்கு தொற்று பாதித்த நபர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படு வார்கள்.
சென்னை வர்த்தக மய்யத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை மய்யத்தில் 11 கிலோ லிட்டர் கொள் ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ளது.
இம்மய்யத்தில் பணிபுரியும் மருத்து வர்கள், செவிலியர்கள், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் மூன்று வேளையும் விலையில்லாமல் தரமான உணவு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இம்மய்யத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மய்யத்தில் சிசிடிவி கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காணிப்பு கருவிகள் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் அமைக்கப்பட் டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து இந்த மய்யம் தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகிறது.
இந்தக் கோவிட் சிகிச்சை மய்யத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனை மற்றும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.
No comments:
Post a Comment