கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை
சென்னை,
ஜூன் 18 ஆட்டோவில் பயணம் செய்ய இ-பதிவு முறையை
ரத்து செய்ய வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்கள், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று
எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா
ஊரடங்கால் ஆட்டோ, கட்டுமானம், தையல், மீன்பிடி, சாலையோர வியாபாரம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் முற்றாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
இவர்களது
வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பொதுமக்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்டோவில் பயணிக்க இ-பதிவு என்கிற
முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
கரோனா
பேரிடரால் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ரத்து செய்யப்பட்டுள்ளன. கரோனா 3ஆவது அலை ஏற்படும் என்ற அச்சம் கலந்த சூழ்நிலையில், அடுத்த பல மாதங்களுக்கும் கோயில்
திருவிழாக்கள், நாடகங்கள் அனைத்தும் நடத்துவதற்கான வாய்ப்பற்ற நிலையே நீடிக்கிறது.
எனவே,
தமிழக அரசு கோயில்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கியதுபோல, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
கட்டுமானம்,
ஆட்டோ உள்ளிட்ட 17 நல வாரியங்களில் பதிவு
செய்துள்ள தொழிலாளர்களுக்கு கரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வருமான இழப்பை சரி செய்வதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், குறைந்தபட்ச தொகையாக ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
வாகனங்களுக்கு
எப்.சி. எடுக்கும் காலம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும் காலம் உள்ளிட்ட அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகப் பணிகளுக்கும் வரும் டிசம்பர் வரை கால நீட்டிப்பு செய்வதுடன், இஎம்அய் செலுத்துவதற்கான காலத்தையும் டிசம்பர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு
கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணா
நீர் தமிழக எல்லைக்கு வந்தது
சென்னை,
ஜூன் 18 சென்னை
குடிநீருக்காக, ஆந்திரமாநிலம்- கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் நேற்று முன்தினம் காலை தமிழக எல்லைக்கு வந்தது. அதை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர்,
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.
சென்னையின்
குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீரை திறக்க வேண்டும் என சமீபத்தில் ஆந்திர
அரசிடம், தமிழக அரசுகோரிக்கை வைத்தது. அதன் விளைவாக, சென்னை குடிநீருக்காக கடந்த 14ஆம் தேதி காலை முதல், கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி கிருஷ்ணா
நீரை, கிருஷ்ணா கால்வாயில் ஆந்திர அரசு திறந்து வருகிறது.
அந்நீர்,
கண்டலேறு அணையிலிருந்து 152 கி.மீ. தொலைவில்
உள்ள தமிழக எல்லையான, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் வந்தடைந்தது.
அப்போது,
விநாடிக்கு 40 கனஅடி என வந்த கிருஷ்ணா
நீர், படிப்படியாக அதிகரித்து, காலை 9.30 மணியளவில் விநாடிக்கு 90 கன அடி என
வந்து கொண்டிருந்தது. அதை, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்,
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.
No comments:
Post a Comment