ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 17, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஒன்றிய அரசின் 41 வெடிமருந்து தொழிற் சாலை களையும் ஏழு கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றிட மோடி அரசு ஒப்புதல் அளித்தது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதன் முறையாக 2 நாள் பயணமாக மு..ஸ்டாலின் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது, நீட் தேர்வு ரத்து, கூடுதல் தடுப்பூசி, குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

* பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா, டில்லியில் உள்ள விடுதியில் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நள்ளிரவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

 இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மகாராட்டிரா முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரே  நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மராத்தா சமூகத் தலைவர்களிடையே இன்று ஆலோசனை நடத்துகிறார்.

* ஒன்றிய அரசு பாஜக தலைமையில் உள்ளதால், மாநிலங்கள் சுயாட்சியை மீண்டும் பெறுவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். கூட்டாட்சி அரசியலின் ஒற்றுமைக்கு திரும்புவதற்கு நிதி வலிமை, ஆட்சி, அரசியல் வலிமை மற்றும் பிராந்திய அடையாளம் என நான்கு வழிகளைக் கையாளலாம் என மூத்த பத்திரிக்கையாளர் சுகாஸ் பல்சிகார் குறிப்பிட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புத் தொகை, தாய் - தந்தையை இழந்தோருக்கு ரூ. 3 லட்சம் நிதி. திட்டங்களை தொடங்கி வைத்தார் தமிழ் நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின்.

தி இந்து:

* இந்தியா வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டாலும் அறியாமை நிலையை நோக்கி வேகமாக நகர்கிறது. பிரதமர் நரேந்திர மோடி முற்றிலும் நவீனமாகத் தெரிந் தாலும், மூடநம்பிக்கையில் நம்பிக்கையற்ற முறையில் மூழ்கியிருப்பதாகவும் தெரிகிறது என முன்னாள் ராணுவ வீரர், விவசாயி ஜி.ஆர்.கோபிநாத் தெரிவித்துள்ளார்.

தி டெலிகிராப்:

* இந்தியாவின் அதிகார அரசியலில் ஒரு முக்கிய பங்காற்றும் ஆர்.எஸ்.எஸ். ஏன் பதிவு செய்யப்படாத அமைப்பாக உள்ளது என்று இரண்டு சர்ச்சைக்குரிய நிதி ஒப்பந்தங்களை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

* பகுத்தறிவு காலத்தில் குருட்டு நம்பிக்கையின் அடிப் படையில் நாடு நகருகிறது என பொருளாதாரப் பேராசிரியர் அனுப் சின்ஹா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

- குடந்தை கருணா  

No comments:

Post a Comment