கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3ஆம் தேதி தொடங்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 1, 2021

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3ஆம் தேதி தொடங்கும்

 திருவனந்தபுரம், ஜூன் 1 கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்க வாய்ப் புள்ளதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மய்யம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் பருவமழை ஒருநாள் முன் கூட்டியே கேரளாவில் தொடங்குகிறது. இந்தி யாவிற்கு அதிகமான மழைப் பொழிவைக் கொடுக் கும் பருவமழையான தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும். தென்மேற்குப் பருவமழை வாயிலாகத் தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது.

தென்மேற்குப் பருவ மழை சீராக இருந்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும். இந்த ஆண்டு இயல்பான மழைப் பொழிவு இருக்கும் என முன்கூட்டியே கணித்து இருந்தது. அதுபோலவே இந்த வழக்கத்தை விட முன்கூட்டியே கேரளாவில் 31ஆம் தேதியே பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்று தேசிய வானிலை முன்னறிவிப்பு மய்யம் தெரிவித்து இருந்தது.

அம்மய்யம் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமீபத்திய வானிலை அறிகுறிகளின் படி, தென் மேற்கு பருவக்காற்று ஜூன் 1 ஆம் தேதி முதல் படிப்படியாக வலுவ டைந்து கேரளாவில் மழைப் பொழிவை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. ஆகை யால், கேரளாவில் தென் மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment