முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக முதலமைச் சராக மு.க.ஸ்டாலின் மே 7ஆம் தேதி பதவி ஏற்றதும் கரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையொப்பமிட்டார். இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டார். அதன்படி கடந்த மாதம் நியாய விலைக் கடைகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ரூ.2 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்பட்டது.
2ஆவது கட்டமாக கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங் கும் திட்டத்தை கலைஞர் பிறந்த நாளான இன்று (வியாழக்கிழமை) சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் அறிவித்த பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment