உயிரின வகைகளின் ஆறாவது பேரழிவுக்கு மனிதரே காரணம்
அரசுசெல்லையா
மேரிலாந்து
பல்கலைக்கழகம்,
பால்டிமோர், அமெரிக்கா
கோவிட் பெருந்தொற்றால் விளைந்திருக்கும் உயிரிழப்பும், உடல்நலக்குறைவும், வாழ்வாதாரச் சிதைவுகளும் உலகளாவிய அளவில் எங்கும் காண்கிறோம். எப்போது இப்பேரிடரிடமிருந்து முற்றிலும் மீள்வோம் என்றஆதங்கத்துடன் நாம் எல்லோரும் கவலைப்படுகிறோம். சிந்திக்கிறோம். ஆனால், இந்தகோவிட் பெருந்தொற்றைவிட பல மடங்கு ஆபத்தானது மனித இன செயல்பாடுகளால் விளைய இருக்கும் சூழியல் பேரிடர்.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியலா ளர்களும், சுற்றுச்சூழல் காப்பில் ஆர்வலர்களும் மிகப்பெரும் சூழியல் பேரிடர் மானுடத்தை தாக்க இருப்பதை எச்சரித்து வருகிறார்கள். அதன் முழுத்தாக்கம் கோவிட் பேரிடரைப்போல் 10 மடங்காவது அதிகமானதாக இருக்கும். அதுவும்இன்னும் 10 ஆண்டுகளுக்குள்உலகளாவிய அளவில்உணரப்படும் எனவும் எனது கருத்தை சென்ற ஞாயிறுமலரில் குறிப்பிட்டிருந்தேன். தற்போதையஅளவில் அறிவிய லாளர்கள், சூழியல்காப்புசெயல்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் என்ற அளவை தாண்டிவெகு சிலநாடு களிலேயே இதுமக்கள் இயக்கமாக மலர்ந்திருக்கிறது.
இந்த கட்டுரைத் தொடரும், இதுபோன்று பல்லாயிரக்கணக்கானகட்டுரைகளும், கருத்தரங்கு களும் சூழியல் சிக்கல்களை அலச வேண்டும். ஆராய வேண்டும். வர இருக்கும்பேரிடரை பெரும் பாலானமக்கள் உணரச்செய்யவேண்டும். அதுவே ஆட்சியாளர்களையும், தொழில்நிறுவனங்களையும், தொண்டு நிறுவனங்களையும் ஒருங்கிணைந்து செயல்பட வைக்கத் தூண்டும். உலகம் முழுதும் வாழ்ந்து வரும் தமிழின மக்கள் இந்தபேரிடர் பற்றிய கூறுகளை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் முற்றிலும் உணர்ந்தால் நல்லது. அந்தந்த நாடுகளில் தமிழர்கள் முன்னின்று சூழியல்காப்பு செயல்பாட்டாளர்களாக மாறி, இந்தபேரிடருக்கு நிரந்தரத் தீர்வு எட்ட தோள் கொடுக்கமுடியும்.
சென்றகட்டுரையில்சூழியல் பேரிடருக்கான நான்குகூறுகள் / காரணிகளைசொல்லியிருந்தேன். 1) உயிரினவகைகளின்ஆறாம்பேரழிவு 2) புவி வெப்பத்தைஅதிகரிக்கும்வாயுக்கள்வெளியீடு
3) மானுடத்தின் திடதிரவ கழிவுகள் 4) காடுகள்அழிப்பு/விலங்குப் பண்ணைகள் விளைக்கும் பெருந்தொற்றுகள்.
இந்த நான்கு கூறுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. இருப்பினும் ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய்வோம்.
உயிரின வகைகளின் ஆறாம் பேரழிவு மனித இனத்தின் தலையீட்டால் நடக்கிறதென அறிவிய லாளர்கள் தெரிவித்திருக் கிறார்கள். உயிரின வகைகளின் சிதைவும், அழிவும்(Disruption and destruction of biodiversity) மிகப் பெருமளவில் பல்வேறு வகையில் மானுடத்தை பாதிக்கும். விவசாயம், மீன்பிடித்தல், மற்றும் பல்வேறு தொழில்கள் வீழ்ச்சியுற வழிவகுக்கும். தமிழ்நாட்டில் ஏராளமாகப் பார்க்கப்பட்ட புனுகுப் பூனை, செந்நாய், உடும்பு, கீரி போன்ற விலங்குகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. நிறைந்திருந்த இலுப்பை, நாவல்மரங்கள் இப்போதெல்லாம் காண்பது அரிதாகிக்கொண்டிருக்கிறது. நாட்டுமாடுகள், எருமை போன்ற விலங்குகளை வளர்ப்பவர்கள் அருகிக் கொண்டிருக்கிறார்கள். இதனாலெல்லாம் என்ன தாக்கம் என்பதை எளிதில் கணக்கிட்டுவிடமுடியாது. உதாரணமாக தமிழ்நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் சுவடு இல்லாமல்அழிந்துபோன விலங்கு தாவர இனங்களை கணக்கில் எடுத்து, அவ்விழப்பால் என்ன விளைவுகள் என்பது ஆராயப்பட வேண்டும். இனினும் இப்படி உயிரின வகைகள்அழியாவண்ணம்தடுக்கும் முயற்சிகளை (Conversation and preservation) மேற்கொள்ளவேண்டும்.
அமெரிக்காவிலிருந்து சிலஉதாரணங்களை பார்ப்போம்.
தற்போது புளோரிடா மாநில கடலில்வாழும் மானட்டீஸ்(Manatees) ஒரு கடல் பாலூட்டி விலங்கு. கடலில் வளரும் புற்களை உண்டு வாழும் இவ்விலங்கை புளோரிடா மாநிலத்தின் அடையாளமாகவும் கொள்ளலாம். இது ஒரு “குறியீட்டு விலங்கு(Sentinel species) என்றும் கருதப்படுகிறது. அதாவது இவ்விலங் கினம் நன்றாக வாழ்ந்தால், மற்ற பலகடல் உயிரினங்கள் நன்றாக வாழ்கின்றனஎன்று எடுத்துக் கொள்ளலாம். தற்போது மானட்டீஸ் பெரும் அழிவை நோக்கி செல்கிறது. கடலில்கலந்துகொண்டிருக்கும்விவசாய, விலங்குப்பண்ணை மற்றும் பிறகழிவுகள் இந்த அழிவுக்கு காரணம் என கருதுகிறார்கள். அண்மையில் இந்த விலங்கின அழிவு மிகப்பெரும் மற்ற உயிரின அழிவின் அடையாளம் என்று கருதி கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
அழிவின் விளிம்பில் இருக்கும் இன்னொரு உயிரினம், பறவை இனத்தைசார்ந்த Humming bird என்ற குருவி. மெக்ஸிகோ பகுதியிலிருந்து வடக்குநோக்கி அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு ஒவ்வொரு கோடைகாலத்திலும் இடப்பெயர்வு (Migration) செய்யும். மீண்டும் குளிர்காலம் துவங்கும் போது தெற்கு நோக்கி மெக்ஸிகோ நாட்டுப்பகுதிக்கு பறந்துசெல்லும். பல்லாயிரக்கணக்கில் அமெரிக்க நாடு முழுதும் கோடையில் காணப்படும் இக்குருவிகள் எண்ணிக்கை அருகி வருகிறது. இதற்கு காரணம் இதுநீண்டதூரம் பறந்துவரும் வழியில் காடுகள்அழிக்கப்படுவது என கருதுகிறார்கள். இதன் எண்ணிக்கை குறைவாலோ அல்லது அழிவாலோ, விவசாயம்பெரிதும் பாதிக்கப்படும். ஏனென்றால், இக்குருவி, தான் கடந்து வரும் நீண்ட பயணத்தின் போது செய்யும் மகரந்தசேர்க்கை,வெவ்வேறுவகையானவிவசாய விளைச்சல்களுக்கு அடிப்படை என கண்டறிந்திருக் கிறார்கள்.
புள்ளிகள் கொண்ட ஆந்தை இனம் (Spotted Owl) அழிவிலிருந்து அமெரிக்காவில் மீட்டெடுத் திருக்கிறார்கள். இந்த பறவைகள் காட்டில் வாழும் சிறுசிறு எலிவகை விலங்குகளை உண்டு அவற்றை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. பல்வேறு காட்டு உயிரினங்களின் சார்பு வாழ்க்கை (லீமீணீறீtலீஹ் மீநீஷீsஹ்stமீனீ) நன்றாக இருப்பதை இந்த ஆந்தை இன நல்வாழ்வு பிரதி பலிப்பதாகக் கொள்ளப்படுகிறது.
மேலே சொன்ன உதாரணங்களைப் போல உலகளாவிய அளவில்ஏராளமான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் உயிரினங்களில் ஒன்று அழிவுற்றால், அது மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படுத்தும். அதன் விளைவுகளைக் கணக்கிடமுடியாது.
உலகளாவிய அளவில் இலட்சக்கணக்கான பூச்சி வகைகள் அழிந்து வருகின்றன அல்லது அழிவின் விளிம்பில் இருக்கின்றன. காடுகளை அழித்து வீடுகளாக்குதல், பூச்சிமருந்து அளவு கடந்து விவசாயத்துக்குப் பயன்படுத்துதல் போன்ற செயல்கள் இவ்வழிவிற்கு காரணம். உலக விலங்கினங்களில் 40% பூச்சியினங்கள். அதில் 6% பூச்சியினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. பெருமளவில் பூச்சியினங்கள் அழிந்து போனால், உலகில் மனித வாழ்க்கை மட்டுமல்ல, மற்ற உயிரின வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும்.
போலியோ தடுப்பூசியை கண்டுபிடிக்க முக்கிய காரணமான மருத்துவஆய்வாளரானஜோனாசால்க் (Jona Salk) சொல்லிய ஒருகூற்று இங்கு முக்கியமாகிறது. அதாவது, “பூச்சியினங்கள்அழிவுற்றால், உலகில் உயிர் வாழ்க்கை 50 ஆண்டுகளில்முடிவுக்குவரும். மனித இனம் அழிவுற்றால் பிற உயிரினங்கள் செழிக்கும்”
("If all the insects were to disappear from the earth, within 50 years all life on earth would end. If all human beings disappeared from the earth, within 50 years all forms of life would flourish.” -Jonas Salk).
மனித இனம் கண் மூடித்தனமாக நடத்திக் கொண்டிருப்பது அமேசான் உள்ளிட்ட காடுகள் அழிப்பு. குடியிருப்புகளுக்காகவும், தொழிலுக்காகவும் அழிக்கப்படும் காடுகளால் நிரந்தரமாக அழியும் உயிரினம் பலப்பல.
விவசாயம், தொழிற்சாலைக் கழிவுகளும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் நிலத்திலும், நீரிலும் வாழும் உயிரினங்களை அழிவின் விளிம்பிற்கு கொண்டுசொல்கின்றன. அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அழிவின் விளிம்பு உயிரினசட்டம் (endangered species act), உயிரினங்களை அழிவிலிருந்து மீட்கவும் காக்கவும் பயன்படுகிறது. அச்சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அவை போதாது எனவே தோன்றுகிறது.
இந்தியா, அமெரிக்கா போன்ற சனநாயக நாடுகளில் தற்போதைய உயிரின அழிவுகள் வெளிப்படைத் தன்மையுடன் ஆராயப்பட்டு, அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களை காக்க ஆவனசெய்யப்படவேண்டும். நிலை கட்டுக்கடங்காமல் மீளமுடியா நிலைக்கு போகு முன்னர் சரியான நடவடிக்கைகள் அவசியம் அவசரம்.
அடுத்தகட்டுரையில், புவியில்வெப்பம் கூடிக் கொண்டிருப்பதன் காரணிகளையும், விளைவுகளையும் பார்ப்போம்.
No comments:
Post a Comment