கரோனா பாதிப்பில் முதல் இடத்திலிருந்த தமிழ்நாடு 2 ஆவது இடத்திற்கு வந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 17, 2021

கரோனா பாதிப்பில் முதல் இடத்திலிருந்த தமிழ்நாடு 2 ஆவது இடத்திற்கு வந்தது

 புதுடில்லி, ஜூன் 17 தமிழ்நாடு 2ஆம் அலையின் வீழ்ச்சிப்பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத் தொடங்கியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று நாள்தோறும் பாதிப்பில் கடந்த சில நாள்களாக தமிழ்நாடு முதல் இடத்தில் இருந்து வந்தது. ஆனால், நேற்று (16.6.2021) காலை 8 மணி வரையிலான நிலவரப்படி தினசரி தொற்று பாதிப்பில் தமிழ்நாட்டை கேரளா விஞ்சி, முதல் இடத்துக்கு வந்துள்ளது.

இதனால் தினசரி தொற்று பாதிப்பில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு வந்து விட்டது. கேரளாவில் நேற்று 12 ஆயிரத்து 246 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இது தமிழ்நாடு 2 ஆம் அலையின் வீழ்ச்சிப்பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத்தொடங்கி இருப்பதைக் காட்டுகிறது.

No comments:

Post a Comment