உண்மை - தரவுகளின் அடிப்படையில் சமூக ஊடகங்கள் வழியாக கொள்கைகளைப் பரப்ப வேண்டும்
இராஜராஜன் ஆர்.ஜெ. உரை
திராவிடர் கழக இளைஞரணி சார்பில் முகநூலில் நமது பிரச்சார முறைகள் எனும் தலைப்பில் 27 ஆவது இணையவழி தொடர் சொற்பொழிவுக் கூட்டம் 6.6.2021 அன்று மாலை 6.30 மணி முதல் 8.45 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்தில் தென்காசி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கை.சண்முகம் வரவேற்புரையாற்றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தே. காமராஜ் தலைமையேற்று உரையாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் இணைப்புரை வழங்கினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் பொழிசை கண்ணன், ஆத்தூர் சுரேஷ், பொன்னமராவதி ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தொடக்க உரையாற்றினார்.
சிங்கப்பூர் தகவல் தொழில் நுட்பவியலாளார் ராஜராஜன் ஆர்.ஜெ. உரை வருமாறு:
பிரச்சார முறைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய உத்திகளுடன் நடைபெற்று வருகின்றன. கூட்டங்கள், இதழ்கள், மாநாடுகள், நாடகங்கள் என தொடங்கிய பிரச்சாரம் இன்று அறிவியலின் வளர்ச்சியால் பரிணாமம் அடைந்திருக்கிறது.
அறிவியல் என்பது நம் அனைவரையும் இணைத்திருக்கிறது. 2000 ஆம் ஆண்டில் பிளாக் மூலம் நமது இயக்கக் கருத்துகளை தோழர்கள் எழுதினார்கள். அடுத்த காலகட்டம் சமூக ஊடகமாக நாம் வளர்ச்சி அடைந்தோம். உரையாடலுக்கான களமாக ஆர்குட், முகநூல், டிவிட்டர் மற்றும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறோம்.
ஊடகங்களில் நமது ஆதிக்கம் :
2009 ஆம் ஆண்டு காலகட்டத்தில் திராவிட இயக்கத்தின் மீதான தாக்குதல்கள் அதிகளவில் நிகழ்ந்தன. திராவிடத்தால் வீழ்ந்தோம் என பொய் உரைத்தனர். ஆனால், 2010ஆம் ஆண்டு முதல் திராவிட இயக்கத் தோழர்கள் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்கள்.
திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் பொய்யை மட்டுமே மக்களிடம் மீண்டும் மீண்டும் சொல்லி வந்தனர். பொய்களைப் பரப்பியதால் சில நேரங்களில் வெற்றியும் பெற்றனர்.
நாம் தகவலின் அடிப்படையில், காலவரிசை அடிப்படையில் உண்மையை உரக்கச் சொல்லியும், திரும்ப திரும்ப சொல்லியும் வருகிறோம். நம்முடைய தோழர்கள் அறிவுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
அறிவுக்கு இடம் கொடுக்க வேண்டும் :
இளைஞர்கள் பெரும்பாலானோர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மீது திசை திரும்பி இருந்தனர். அதேநேரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஆசிரியர் மட்டும்தான் அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகுதான் நீட் தேர்வில் நம்முடைய இளைஞர்களின் கவனம் திசை திரும்பியது. உணர்ச்சிக்கு இடம் கொடுக்காது நம்முடைய தோழர்கள் அறிவுக்கு முதலிடம் கொடுத்து சமூக ஊடகங்கள் வாயிலாக நாம் நமது கொள்கைகளைப்பரப்ப வேண்டும்.
இயக்கப்பலம், இதழ்பலம், ஊடக பலம் கொண்டுள்ள நாம் மீம்ஸ் போன்ற அறிவியல் முறைகளைப் பின்பற்றி நம்முடைய இயக்கப் பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனப்பேசினார்.
கூட்டத்தில் தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் நூலகர் வே.ராஜவேல், விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர்
தா. இளம்பரிதி, புதுவை இளைஞரணி தலைவர் தி.இராசா, கோவை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.பிரபாகரன், குடந்தை மாவட்ட இளைஞரணித் தலைவர் க.சிவகுமார், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் அரவிந்த்குமார், ஆத்தூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வேல்முருகன், கோவை வெற்றிச்செல்வன், விருத்தாசலம் பாலச்சந்தர், தஞ்சை மாநகர இளைஞரணித் தலைவர் பெரியார் செல்வம். மண்டல தலைவர் சடகோபன், செயலாளர் பட்டாபிராமன், மாநில ப.க துணைத் தலைவர் அண்ணா சரவணன், தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி, திருத்துறைப்பூண்டி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆதவன், தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன்,செயலாளர் சண்முகம், கடலூர் மாவட்டத் தலைவர் தண்டபாணி, பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் வீரையன், திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், விருத்தாசலம் மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேரா. பூ.சி.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் நீலகண்டன், ப.க முருகேசன், கோவை இராஜா, கோவை இரமேசு உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி இணைய வழியாக ஒருங்கிணைப்பு செய்து உத வினார். கூட்டத்தின் நிறைவில் திரு வண்ணாமலை மாவட்ட இளைஞரணி தலைவர் திருமலை நன்றி கூறினார்.
தொகுப்பு: த.சீ. இளந்திரையன்
No comments:
Post a Comment