சென்னை,ஜூன்2- தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து நேற்று (1.6.2021) பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
தனிமைப்படுத்துதலில்
உள்ள வர்களின் மொத்த எண்ணிக்கை 2லட்சத்து 96ஆயிரத்து 131.
மொத்தம்
எடுக்கப்பட்ட மாதி ரிகளின் எண்ணிக்கை 2கோடியே 78லட்சத்து 42ஆயிரத்து 512.
நேற்று
ஒரு நாளில் எடுக்கப் பட்ட சோதனை மாதிரி எண் ணிக்கை 1லட்சத்து 67ஆயிரத்து 397. மொத்தம் தொற்று உள்ளவர் கள் எண்ணிக்கை 21,23,029.
தொற்று
உறுதியானவர்கள் எண்ணிக்கை 26,513. சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண் ணிக்கை 2467. சென்னையில் சிகிச் சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 32,069. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 12,50,950 பேர். பெண்கள் 8,72,041 பேர். மூன்றாம் பாலினத்த வர் 38 பேர். தொற்று உறுதியானவர் களில் ஆண்கள் 14,783 பேர். பெண் கள் 11,730 பேர். குணமடைந்தவர்கள் 31,673 பேர். மொத்தம் குணமடைந் தவர்கள் எண்ணிக்கை 18,02,176.
இன்று
கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 490 பேர் உயிரிழந்தனர். 198 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார், 292 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 24,722 ஆக உள்ளது. சென்னையில்
மட்டும் மொத்தம் 7145 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கியப்
பிரச்சினையாக சுவா சப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரண மாக உள்ளன. இன்று உயிரிழந்தவர் களில் 379 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 111 பேர்.
இன்று
மாநிலம் முழுவதும் 8072 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 16444 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 618 அய்சியு படுக்கைகளும் பயன்பாட் டுக்குத் தயாராக இருக்கின்றன.
இவ்வாறு
பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment