தருமபுரி மாவட்டத்தில் “விடுதலை”நாளிதழை இணையம் வழியாக தோழர்கள் மூலம் 25 ஆயிரம் பேருக்கு அனுப்ப இலக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 1, 2021

தருமபுரி மாவட்டத்தில் “விடுதலை”நாளிதழை இணையம் வழியாக தோழர்கள் மூலம் 25 ஆயிரம் பேருக்கு அனுப்ப இலக்கு

கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

தருமபுரி, ஜூன் 1 தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் காணொலி வழியாக 17.5.2021 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகத் தலைவர் வீ.சிவாஜி, தலைமையேற்று நடத்தினார். மாவட்டச் செயலாளர் மு.பரமசிவம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மாவட்ட மகளிரணி செயலாளர் முருகம்மாள் கடவுள் மறுப்பு கூறினார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.வேட்ராயன், .மாதன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மாரி. கருணாநிதி, தருமபுரி நகர தலைவர் கரு.பாலன், மாவட்ட மாணவர் கழக தலைவர் .சமரசம் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

தலைமை செயற்குழு முடிவுகள் குறித்தும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் சுவரெழுத்துப் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல், "விடுதலை"நாளிதழை தோழர்களின் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் இணையத்தின் வழியாக அனுப்பி படிக்க வைக்க வழி செய்வது குறித்து திராவிடர் கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் முன்னுரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாநில மாணவர் கழக அமைப் பாளர் செந்தூரப்பாண்டியன், மண்டல கழக தலைவர் .தமிழ்ச்செல்வன், மண்டல செயலாளர் பழ.பிரபு, மண்டல இளைஞரணி செயலாளர் வண்டி ஆறுமுகம், மாவட்ட ஆசிரியரணி துணைத் தலைவர் தீ.சிவாஜி, மண்டல மாணவர் கழக செயலாளர் மா.செல்லதுரை, விடுதலை வாசகர் வட்ட தலைவர் .சின்னராஜ், செயலாளர் சுதாமணி, கிருஷ்ணகிரி நகர தலைவர் தங்கராசு, ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் சிவராஜ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

இறுதியாக திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன், கரோனா நோய் தொற்று பேராபத்தில் கழக குடும்பத்தினர் விழிப்புடன் இருப்பது, ஒவ்வொரு தோழர்களும் தன்னுடைய பங்களிப்பாக விடுதலையை தன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தோழர்களுக்கும், இணைய வழியில் குழுக்களுக்கு அனுப்புவது, அதே போல மாவட்டத்தில் கடந்த ஆண்டு தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சுவரெழுத்துப் பிரச்சாரம் மேற்கொண்டது போல இந்த ஆண்டும் சிறப்பாக இவ்வாண்டும் சுவரெழுத்து பிரச்சாரத்தை தொடர வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

இக்கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1: தருமபுரி மாவட்ட கழக புரவலர் கே.ஆர். சின்னராஜ், மாவட்ட மேனாள் இளைஞரணி செயலாளர் வி.பா.ஆதவன், மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் மா.கிருட்டிணன், மற்றும் மண்டல மாணவர் கழக செயலாளர் செல்லதுரையின் தந்தையார், மாவட்ட இணைச் செயலாளர் கு.சரவணனின் தாயார் ஆகியோர் மறைவிற்கு வீரவணக்கம் செலுத்துகிறது.

தீர்மானம் 2: மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுவரெழுத்துப் பணியை மேற்கொள்வது, விடுதலையை இணைய வழி தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைத்தல், இணைய வழியாக அனுப்பும் விடுதலையின் இலக்கு 25 ஆயிரத்தை கணக்கிட்டு செயல்படுதல், தற்போது இணைய வழியாக  குழுக்கள் மூலம் அனுப்பும் தோழர்களின் விவரம்:  ஊமை ஜெயராமன், 45 குழுக்கள் மூலம் 5247 பேர்களுக்கும், மாரி கருணாநிதி 47 குழுக்கள் மூலம் 5247 பேர்களுக்கும், வீ.சிவாஜி, 2 குழுக்கள் வழியாக 250 பேர்களுக்கும், .தமிழ்ச்செல்வன் குழுக்கள் மூலம் 470 பேர்களுக்கும், கதிர்செந்தில் 22 குழுக்கள் மூலம் 2794 பேர்களுக்கும், .யாழ்திலீபன் 20 குழுக்கள் மூலம் 256 பேர்களுக்குமென 16203 பேர்களுக்கும் விடுதலை அனுப்பப்படுகிறது.

 இறுதியாக மாவட்ட அமைப்பாளர் சேட்டு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment