இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,753- பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 19, 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,753- பேருக்கு கரோனா

 புதுடில்லி, ஜூன் 19 இந்தியாவில் தொடர்ந்து 37ஆவது நாளாக தொற்று பாதிப்பவர்கள் எண்ணிக்கையை விட குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்தியாவில் கரோனா 2ஆவது அலை பரவல் குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 60,753- பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 97,743- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,647- பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து 37ஆவது நாளாக தொற்று பாதிப்பவர்கள் எண்ணிக் கையை விட குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தியாவில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு விகிதம் 2.98 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுப வர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 60 ஆயிரத்து 019 ஆக சரிந்துள்ளது.

No comments:

Post a Comment