முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,ஜூன்4- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
"13.5.2021 அன்று இந்திய வானிலை ஆராய்ச்சி மய்யம் 'டவ் தே' புயல் குறித்து வெளியிட்ட எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தமிழக அரசு பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொண்டது. இதன் காரணமாக, அரபிக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 246 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பி யுள்ளன. இருப்பினும், கீழ்க்கண்ட 2 நிகழ்வுகளில் 21 மீனவர்கள் காணாமல் போய்விட்டதாகத் தகவல் பெறப்பட்டது.
1) நாகப்பட்டினம் மாவட் டத்தைச் சேர்ந்த IND-TN-06-MM- 5517 பதிவெண் கொண்ட படகு, லட்சத்தீவுக்கு அருகே கடலில் மூழ்கியதாகவும் அதிலுள்ள 9 மீனவர்கள் காணாமல் போய் விட்டதாகவும் தகவல் பெறப்பட் டது.
காணாமல் போன 9 மீனவர் களைத் தேடுதல் மற்றும் மீட்புப் பணி நடவடிக்கைகளைத் துரிதப் படுத்த வலியுறுத்தி, தமிழக முதல்வரால் மத்திய பாது காப்புத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, மூழ்கிய படகு மற்றும் 9 மீன வர்களைப் பாதுகாப்பாக மீட்ப தற்கு மீட்புப் பணியில் இந்திய கடலோர காவற்படையின் கப்பல் 'விக்ரம்' மற்றும் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு தேடுதல் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.
மேலும், லட்சத்தீவு நிர்வாகி யின் ஒரு ஹெலிகாப்டரும் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.
கடலில் மூழ்கிய மணிகண்டன் என்பவரது மீன்பிடிப் படகுடன் ஒன்றாகச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இதர
2 மீன்பிடி விசைப்படகுகளில் சென்ற 23 மீனவர்களும், காணா மல் போன 9 மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டும் இது வரை கண்டுபிடித்திட இயல வில்லை.
2) கேரள மாநிலம் கோழிக் கோட்டைச் சேர்ந்த சபிஷ், என்ப வருக்குச் சொந்தமான அமீர் ஷா என பெயர் கொண்ட மீன்பிடி விசைப்படகு பதிவு எண் IND-KL-07-MM-4989இல் 05.05.2021 அன்று 16 மீனவர்களுடன் கேரள மாநிலம் பைபோர் (Beypore) மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றதாகவும், 16 மீனவர்களில் 12 மீனவர்கள் கன் னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், 'டவ் தே' புயல் கடந்த பின்பு அவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது.
முன்னதாக, இந்திய கட லோரக் காவற்படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு கட லோரக் காவற்படையினரால் தேடுதல் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. காணாமல் போன 21 மீனவர்களைத் தீவிர மாகத் தேடிக் கண்டுபிடித்து மீட்கக் கோரி முதல்-அமைச்சர் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சருக்குக் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார்.
'டவ் தே' புயல் காரணமாக காணாமல் போன நாகப் பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களும், மயிலாடு துறை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும் (மொத்தம் 21 மீனவர்களும்) மீன்பிடித் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் என்பதாலும், காணாமல் போன மீனவர்களை ஆழ்கடலில் இதுவரை ஹெலி காப்டர் மற்றும் கடலோரக் காவற்படையின் கப்பல் மூலம் 15.05.2021 முதல் இதுவரை தொடர்ந்து தேடப்பட்டும் 21 மீனவர்களையும் கண்டுபிடித்திட இயலாத நிலை உள்ளது.
எனவே 'டவ் தே' புயல் காரண மாக காணாமல் போன 21 மீனவர் குடும்பங்களின் வறிய நிலையினைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட காணாமல் போன மீனவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை யாக வழங்க மாண்புமிகு தமிழ் நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார்".
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment