தொடர்ந்து அதிகரிக்கும் மொத்த விலை பணவீக்கம் 2021 மே மாதத்தில் 12.94 சதவிகிதமாக உயர்ந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

தொடர்ந்து அதிகரிக்கும் மொத்த விலை பணவீக்கம் 2021 மே மாதத்தில் 12.94 சதவிகிதமாக உயர்ந்தது

புதுடில்லி, ஜூன் 16 இந்தியாவின் மொத்த விலைப் பணவீக்கம் 12.94 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு மே மாதம் (தற்காலிகம்) மற்றும்மார்ச் மாதத் துக்கான (இறுதி) மொத்தவிலை குறியீட்டு எண்களை (அடிப்படை ஆண்டு: 2011-2012) தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் திங்களன்று வெளியிட்டது. அதில் இதுதொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் மாதத்தில் மொத்த விலைப் பணவீக்கம் 10.5 சதவிகிதமாக இருந்த நிலையில், அது மே மாதத்தில் 12.94 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் 9.75 சதவிகிதமாக இருந்த எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம், ஏப்ரல்மாதத்தில் 20.94 சதவிகிதமாக உயர்ந்தது. இதுவே மே மாதத்தில் 37.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இதேபோல உற்பத்தி சார்ந்த பண வீக்கம் 9 சதவிகிதத்தில் இருந்து 10.83 சதவிகிதமாகவும், உணவு விலைப் பண வீக்கம் 7.58 சதவிகிதத்தில் இருந்து 8.11 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது.

உணவு விலைப் பணவீக்க அதிகரிப்புக்கு, பழம் மற்றும் காய்கறிபொருட்கள் நுகர்வின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றமும், ஊரடங்கு கால போக்குவரத்து முடக்கமும் காரணம் என்று கூறப்படும் அதேநேரத்தில், மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்புக்கு பெட்ரோல் - டீசல் மற்றும் மின்சார விலை உயர்வே பிரதானக் கார ணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சில்லரை விலைப் பண வீக்கமும் ஏப்ரல் மாத அளவான 1.96 சத விகிதத்திலிருந்து 2021 மே மாதத்தில், 5.01 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, உணவுப்பொருள்கள் மீதான சில்லரை விலை பணவீக்கம் 6.3 சதவிகிதமாக உயர்ந் துள்ளது.

No comments:

Post a Comment