சென்னை, ஜூன் 2- தமிழகத்தில் பால் விலை குறைக்கப்பட்டதால் சென்னை மற்றும் இதர மாவட் டங்களில் பால் விற்பனை 2 லட்சம் லிட்டர் வரை அதிகரித்துள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக ஆவின் மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த
2001ஆம் ஆண்டில் இருந்து ஜூன் 1ஆம் தேதி ‘உலக பால் தினமாக’ உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில்ஆவின் தலைமை அலுவலகத்தில் உலக பால் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச் சியில், சிறப்பாகசெயல்பட்ட பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் கூட்டுறவு சங்கம்,மொத்த பால் மற் றும் உபபொருட்கள் விற்பனையா ளர்கள், சில்லறைவிற்பனையாளர் கள், பால் அட்டை நுகர்வோருக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் களை பால்வளத் துறைஅமைச்சர் சா.மு.நாசர்,
ஆவின் மேலாண் இயக்குநர் இரா.நந்தகோபால் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் நாசர் பேசியதாவது:
ஆவின்,
மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து
36 லட்சம் லிட்டர் பாலை தினசரி கொள்முதல் செய்து வந்தது. கரோ னாவை முன்னிட்டு சில தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதலை நிறுத்திய நிலையில், விவசாயிக ளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, பேரிடர்காலத்திலும் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப் படாத வகையில், அவர்களிடம் இருந்து மொத்த பாலையும் ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்கிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் அதிகரித்து 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. சென்னை மற் றும் பிற மாவட்டங்களில் தினசரி பால் விற்பனை 24 லட்சம் லிட்ட ராக இருந்தது. விலை குறைக்கப் பட்ட பின்னர் தற்போது 26 லட் சம் லிட்டர் வரை விற்பனை உயர்ந் துள்ளது. மேலும், புதிய சாதனை யாக, கடந்த மே 23ஆம் தேதி சென் னையில் 15.04 லட்சம் லிட்டர் மற்றும் பிற மாவட்டங்களில் மே 22ஆம் தேதி 12.59 லட்சம் லிட்டர் பால் விற்கப்பட்டது.
நெருக்கடியான
சூழலில் மக்க ளது இல்லத்துக்கே பால் விற்பனை செய்ய உணவு விநியோக நிறுவனங் களுடன் ஆவின் ஒப்பந்தம் செய்து உள்ளது. இதன் மூலம் தினசரி 700க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் பெறப்பட்டு ரூ.3 லட்சம் மதிப்புள்ள பால் பொருட்கள் விற்கப்படுகின் றன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment