சென்னை,ஜூன்2- தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகளை நடத்துவது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டா
லின் தலைமையில் இன்று (2.6.2021) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.
ஆலோசனைக்குப்
பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய
அரசு நடத்திய ஆலோசனையின் போது பெரும்பாலான மாநிலங் கள் பிளஸ்-2 தேர்வை நடத்தக்கோரியிருந்தன. ஆனால், சிபிஎஸ்இ தேர்வை மத்திய அரசு நேற்று ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில்
பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்து வது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட் களில் முடிவெடுக்கப்ப டும்.
14417 என்ற
தொலை பேசி எண்ணில் கல்வி யாளர்கள், பெற்றோர், மாணவர்கள் கருத்துக் களை தெரிவிக்கலாம்.
பிளஸ்-2
மதிப்பெண் முக்கியம். அதேநேரம் மாணவர்களின் உடல் நலனும் முக்கியம்.
இவ்வாறு
அவர் கூறினார்.
No comments:
Post a Comment