பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு செய்ய பள்ளிக்கல்வி செயலர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு செய்ய பள்ளிக்கல்வி செயலர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை,ஜூன்16- பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப் பெண்ணை கணக்கீடு செய்ய பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட் டுள்ளது. இந்தக் குழு, சிபிஎஸ்இ பரிந்துரைகளையும் பரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப் பட்டு, மாணவர்கள் அனைவருக் கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது குறித்து முடிவு செய்ய குழு அமைக்கப்படும். அந்தக் குழு வழங்கும் பரிந் துரைகள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந் தது. அதன்படி, தற்போது 10 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப் பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்;

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப் படுகிறது.

இதன் உறுப்பினர்களாக உயர்கல்வித் துறை செயலர் கார்த் திகேயன், சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் கவுரி, பள் ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷா ராணி, தனியார் பள்ளிகள் இயக்குநர் .கருப்பசாமி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் என்.லதா, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை .ஸ்டெல்லா அம லோற்பவமேரி, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசி ரியர் யு.கணேசன், தனியார் பள்ளி முதல்வர் எச்.ஜேம்ஸ் சத்தியராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட் டுள்ளனர். மாணவர் களுக்கு தேர்ச்சி வழங்கும் விவகாரத்தில், இந்தக் குழு உறுப் பினர்கள் தங்கள் கருத்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கரோனா பாதிப்பால் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து, மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பீட்டை நிர்ணயம் செய்வதற்காக சிபிஎஸ்இ வாரிய மும் நிபுணர் குழு அமைத் துள்ளது.

இந்தக் குழு ஓரிரு நாளில் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. மாணவர்களின் உயர்கல்வி விவகாரம் என்பதால் சிபிஎஸ்இ வழங்கும் பரிந்துரை களையும் பரிசீலனை செய்து தனது அறிக்கையை இறுதி செய்ய தமிழ்நாடு குழுவினர் முடிவு செய்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment