மே மாதத்தில் 1.5 கோடி இந்தியர்கள் வேலை இழந்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 2, 2021

மே மாதத்தில் 1.5 கோடி இந்தியர்கள் வேலை இழந்தனர்

 புதுடில்லி,ஜூன்2- கரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழு வதும் பல்வேறு தொழில் துறைகள் முடங்கி உள் ளனகடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 15.33 மில்லியன் (1.5 கோடி) இந்தியர்கள் வேலையிழந்திருப்பதாக இந்திய பொருளாதார கண் காணிப்பு மய்யம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத் தில் பணியாற்றியவர்கள் எண்ணிக்கை 390.79 மில்லியனாக இருந்தது. மே மாதத்தில் 375.45 மில்லியனாக குறைந்தது. இந்த வேலையிழப்பா னது, ஜூலை 2020 முதல் அடைந்த லாபங்களை அழித்துவிட்டது, இது நுகர்வோர் செலவு மற்றும் பொருளாதார மீட்சியை மோசமாக பாதிக்கும் என் றும் கூறப்பட்டுள் ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், கரோனா இரண்டாவது அலை பல லட்சம் இந்தியர்களைப் பாதித்ததால், மாதச் சம்ப ளம் மற்றும் சம்பளமற்ற வேலைகளில் பணியாற்று வோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 23 மில் லியன் குறைந்தது. மேலும் பல்வேறு மாநிலங்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு கட் டுப்பாடுகளை விதித்தன. வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை உயர்ந்த அதேசமயம், தீவிரமாக வேலை தேடும் நபர்களின் எண்ணிக்கை 17 மில்லி யன் உயர்ந்து, மொத்த எண்ணிக்கை 50.72 மில்லி யன் (5.07 கோடி) ஆனது. இந்த புள்ளி விவரம், வேலைவாய்ப்புகளின் பற்றாக்குறையை பிரதி பலிக்கிறது.

No comments:

Post a Comment