"13 ஆண்டுகள் முழு திருப்தியுடன் பணியாற்றி ஓய்வு பெறுகிறேன்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 19, 2021

"13 ஆண்டுகள் முழு திருப்தியுடன் பணியாற்றி ஓய்வு பெறுகிறேன்"

வழியனுப்பு விழாவில், உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா பேச்சு

சென்னை, ஜூன் 19 சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆர்.சுப்பையா. இவர் நேற்று (18.6.2021) ஓய்வு பெற்றார். இதையடுத்து, அவ ருக்கு வழியனுப்பு விழா தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம், எம்.துரைசாமி, டி.ராஜா உள்ளிட்ட அனைத்து நீதிபதி களும், மாவட்ட நீதிபதிகளும், மத்திய, மாநில அரசு வழக்குரைஞர்கள், என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீதிபதி ஆர்.சுப்பையாவை வாழ்த்தி அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் பேசினார்.

இதற்கு நன்றி தெரிவித்து நீதிபதி ஆர்.சுப்பையா பேசினார். அப்போது, 13 ஆண்டு கால நீதிபதி பணியை முழு திருப்தியுடன், மனநிறைவுடன் பணியாற்றி விடைபெறுகிறேன். நான் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் என்னோடு பணியாற்றிய சக நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோரை ஒருபோதும் மறக்க மாட்டேன். அந்த பசுமையான நினைவுகள் என் வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் என்று அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், நீதிபதி ஆர்.சுப்பையாவின் மனைவி உமா, மகன் வழக்குரைஞர் ரத்தினவேல் பாண்டியன், மகள் டாக்டர் காவேரி, மருமகன் அய்.பி.எஸ். அதிகாரி ரோஹித்நாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகரில்  5 இடங்களில்ரூ.500 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை

பொதுப்பணித்துறை அமைச்சர் ..வேலு தகவல்

சென்னை, ஜூன் 19 சென்னை பெருநகர எல்லைக்குள் உள்ள 4 சுங்கச்சாவடிகளைப் பொதுப்பணித் துறை அமைச்சர் ..வேலு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ..வேலு பேசும்போது, “சென்னை மாநகரில் மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை முக்கியமான 5 சாலைகளின் சந்திப்பில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு 2010ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து அதற்கான நிதியையும் திமுக அரசு ஒதுக்கீடு செய்தது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தாமல் கைவிட்டது. வளர்ந்து வரும் சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலையும், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கவும் மீண்டும் மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை முக்கிய 5 சாலைகளின் சந்திப்பில் சுமார் ரூபாய் 500 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்ட அலுவலர்களுடன் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர எல்லைக்குள் சுங்கச்சாவடி தேவையில்லை எனவும், அதை அகற்ற வேண்டும் எனவும், கடந்த காலங்களில் பொதுமக்கள் பெரிய போராட்டங்களை நடத்தினார்கள். சுங்கச்சாவடிகளை அகற்றினால் அரசுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட இழப்புகள் என்ன என்பதை இன்று நேரில் சென்று துறை அலுவலர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோருடன் கருத்து களைக் கேட்டறிந்தேன். இதுகுறித்து, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்எனத்

தெரிவித்தார்.

 


No comments:

Post a Comment