தமிழகத்தில் சித்த மருத்துவ சிகிச்சை முறையினால் கோவிட்-19 தொற்று குறைவதோடு நோயாளிகள் விரைவில் குணமடைந்த நிலையில் தமிழக அரசால் இந்த ஆண்டு இதுவரை 49 சிறப்பு சிகிச்சை மையங்கள் 4975 படுக்கை வசதிகளுடன் துவங்கப்பட்டு உள்ளன. இதுவரை 10932 பேர் சிகிச்சையில் சேர்ந்துள்ளனர். இதில் 7236 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் 2558 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் 50ஆவது மையம் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் இன்று (29.05.2021) துவக்கி வைக்கப்பட்டது.
40 படுக்கை வசதிகள் கொண்ட இம்மையத்தில் சித்த மருத்துவ வழிமுறைகள் மூலம் லேசான மற்றும் மிதமான அறிகுறிகள் உடைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
உள் மருந்துகள்
1 கபசுர குடிநீர்
2 அமுக்கரா சூரண மாத்திரை
3 பிரம்மானந்த பைரவ மாத்திரை
4 தாளிசாதி சூரணம்
5 ஆடாதொடை மணப்பாகு
பெருமருந்துகளாக லவங்காதி சூரணம், மஹாசுதர்சன சூரணம், மால்தேவி செந்தூரம், பூரண சந்திரோதய செந்தூரம் நோயாளிகளின் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு வழங்கப்படுகின்றது.
வெளி மருந்துகள்
1 கற்பூராதி தைலம்
2 பெயின்பாம்
3 நீர்க்கோவை மாத்திரை
உணவே மருந்து என்ற அடிப்படையில் - தினமும்
1) காலையில் - சீரன குடிநீர்
2) மாலை - கரிசாலை பால்
3) இரவு - சுக்கு கஞ்சி ஆகிய சிறப்பு மூலிகை வகை உணவுகள் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டது
சித்தா சிறப்பு - புற சிகிச்சைகள் - காலையில் திறந்த வெளியில்
சித்தர் யோகா
திருமூலர் பிராணாயாமம்
வர்ம சிகிச்சை
சித்தர் முத்திரைகள்
மூலிகை நீராவி சிகிச்சை
மனநல ஆலோசனைகள் ஆகியவை ஒருங்கிணைந்த வகையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது.
ஆரோக்கியப் பெட்டகம்
இந்நிலையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பும் நோயாளிகள் அனைவருக்கும் தமிழக அரசால் அறிமுகம் செய்யப் பட்ட ஆரோக்கியம் என்ற மருந்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இதில் இடம் பெற்றுள்ள சித்த மருந்துகள் நோயாளியின் உடல் சோர்வை போக்கி உடல் ஆரோக்கியம் பெற பெரிதும் உதவுகிறது.
ஆராய்ச்சிப் பணிகள்
இக்குறுகிய காலத்திலேயே மத்திய சித்த ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய மருத்துவ இயக்குனரகம் மூலமாக 17 ஆராய்ச்சி முடிவுகள் சர்வதேச ஆய்விதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment