முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,மே29- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நேற்று (28.5.2021) வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்து வது தொடர்பாக கடந்த மே 22ஆம் தேதி அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்களுடன் ஆலோ சனை கூட்டம் நடத்தப் பட்டது. அதில்சட்டப் பேரவை கட்சித் தலை வர்கள் தெரிவித்த கருத் துகள் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல் லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்து களை கேட்டறிந்தும் கரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலை கட்டுப் படுத்த தமிழகம் முழுவ தும் மே 24ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் மே 31ஆம் தேதி காலை 6 மணிக்கு முடிவுக்கு வரு கிறது.
இந்நிலையில், நோய்த் தொற்றின் தன்மையை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், தொற்று பரவாமல் தடுத்து மக்க ளின் விலைமதிப்பற்ற உயிர் களை காக்கும் நோக்கத்தி லும், இந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கை ஜூன் 7ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் ஒரு வாரத் துக்கு நீட்டித்து உத்தர விட்டுள்ளேன்.
எனினும், பொதுமக்க ளின் அத்தியாவசிய அன் றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் நடை முறையில் உள்ள நட மாடும் காய்கறி, பழங்கள் விற்பனை, தொடர்பு டைய துறைகள் மூலம் தொடர்ந்து நடக்கும். அத்துடன் மளிகைப் பொருட்களையும் வாக னங்கள் அல்லது தள்ளு வண்டிகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படு கிறது. அந்தந்தப் பகுதிக ளில் உள்ள மளிகைக் கடைகள், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி யுடன் குடியிருப்பு பகுதி களுக்குச் சென்று விற் பனை செய்யலாம். மேலும் ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்கள் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை அனுமதி அளிக்கப்படுகி றது.
கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்நிலை யில், பொதுமக்கள் அவ சியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் சேர்வதையும் தவிர்க்க வேண்டும். கரோனா மேலாண்மைக் கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப் பிட்டுள்ளபடி பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடை வெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகிய வற்றை கட்டாயம் பின் பற்ற வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் தென் பட்டதும், உடனே அரு கில் உள்ள மருத்துவ மனைக்கு சென்று மருத் துவ ஆலோசனை, சிகிச்சை பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
நோய்ப் பரவலை கட் டுப்படுத்த அரசு மேற் கொண்டுவரும் முயற்சிக ளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றேன். இவ்வாறு அறிக்கை யில் முதல்வர் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment