கரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 30, 2021

கரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி  மே 30- மாநில அரசுகள் கரோனா தடுப்பு விதி முறைகளை ஜூன் 30 வரை பின்பற்ற வேண்டும் என மத் திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இரண்டாம் அலை கரோனா பரவலால் கடும் பாதிப்பு அடைந்துள்ளது.  நேற்று (29.5.2021) வரை இந்தியாவில் 2.75 கோடிக்கும் மேல் பாதிப்பு அடைந்து அதில் சுமார் 3.19 லட்சம்  பேர் உயிர் இழந்துள் ளனர்.  நேற்றுவரை 2.49 கோடி பேர் குணம் அடைந்து 23.27 லட்சம் பேருக்கு இன் னும்  பாதிப்பு உள்ளது.

இதையொட்டி நாடெங்கும் கரோனா விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப் பட்டு  வருகின்றன.   இதற் கான விதிமுறைகள் கடந்த ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட் டது.    நேற்று ஜூன் மாத நிலவரம் குறித்து மத்திய உள் துறைச் செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஓர் அறிக்கை அனுப்பி உள் ளார்.

அதில், “இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதியைத் தனிமைப் படுத்துவது, சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தடையின்றி விநியோகம் செய்வது போன்ற நடவடிக்கைகளால், கரோனா பரவல் குறைந்துள் ளது.  இருந்தாலும் பாதிக்கப் பட்டோர் விகிதம் அதிகமாக உள்ளது.

ஆகவே ஏற்கெனவே அறிவித்த கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை, ஜூன், 30 வரை கட்டாயம் பின்பற்றும் படி அறிவுறுத்தப்படுகிறது.  அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள்  உள்ளூர் பாதிப்பு நிலவரத்தை ஆராய்ந்து,  விதி முறை களை படிப்படி யாகத்  தளர்த்துவது குறித்து, உரிய நேரத்தில் முடிவு செய்யலாம்எனக் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment