செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 29, 2021

செய்தியும், சிந்தனையும்....!

 'அட, வீராதி வீரரே!'

*         அலோபதி மருந்துக் குறித்து நான் பேசியதற்காக என்னைக் கைது செய்யக் கூறுவோரின் அப்பன்கள் வந்தாலும் என்னைக் கைது செய்ய முடியாது.     

>>           அன்னா ஹசாரே நடத்திய 'ஊழல் ஒழிப்பு' போராட்டத்தின்போது, காவல்துறை நடவடிக்கை எடுக்க வந்த சமயத்தில் 'சுடிதார்' பெண்கள் உடையை அணிந்து ஓடிய வீராதி வீரர் ஆயிற்றே! 

ஆர்.எஸ்.எஸின் குருநாதர்

*             தாய் மதத்தைப் பழிப்பது தாயைப் பழிப்பதற்குச் சமம்

- காஞ்சி பெரியவாள் ('தினமலர்' ஆன்மிக இதழ்) 

>>           ஆமாம் பிறர் மதத்தை நன்னாவே பழிக்கலாம்!

எச்சரிக்கை!

*            கரோனா - இரண்டாவது அலையில் கிராமப்புறங்களில் பாதிப்பு அதிகம்.

- அமைச்சர் மா. சுப்பிரமணியம்

>>           இது நகரப் புறத்து வியாதி - பணக்காரர் வியாதி என்றெல்லாம் சொன்னதுண்டே!

சொன்னாலும் சொல்லுவார்கள்

*            பா... ஆட்சியில் ஒரே ஆண்டில் 69 விழுக்காடு சமையல் எண்ணெய் விலை உயர்வு.  

>>           எங்கள் ஆட்சியில் "உயர்ந்தது' பார்த்தீர்களா என்பார்களோ!

நூலைப்படி!

*             கரோனா நிதி வழங்கும் சிறுவர்களுக்கு முதல் அமைச்சர் மு.. ஸ்டாலின் திருக்குறள் பரிசு.  

>>           இதற்குப் பெயர்தான் பகுத்தறிவு என்பது!

கிறுக்கர்கள்

*            கரோனாவுக்காகப் பாம்பை சமைத்து சாப்பிட்ட ஆசாமி - கைது  

>>           தண்ணீர்ப் பாம்பா - நல்ல பாம்பா?

நல்லா 'கேஸ்' விடுகிறார்கள்

*             அனுமான் எங்கு பிறந்தான் பீடாதிபதிகள், ஜீயர்கள் ஆய்வு.  

>>           வாயு பகவானுக்கும் - அஞ்சனா தேவிக்கும் பிறந்தான் வாயு என்கிறதே புராணம்.

அதான் ராமன் கோயில் கட்டுகிறார்களே!

றீ           தடுப்பூசி இதே வேகத்தில் சென்றால் நாடு பல அலைகளை சந்திக்கும்.

- இராகுல் காந்தி  

>>           தயாரிப்பு - விநியோகம் - இரண்டிலும் தேவை வேகம்.

No comments:

Post a Comment