"‘பொடியன்’கள்தான் எனக்குத் தேவை"
“மாநாட்டுக்குத் தலைமை வகித்த தோழர் அவர்கள், தான் ஒரு சின்னப் பொடியன் என்றும், தன்னைத் தலைமைப் பதவியில் உட்கார வைத்து நான் வேடிக்கை செய்கிறேன் என்று சொன்னார். இந்த இயக்கம் இன்று ஏதாவது மதிக்கத்தகுந்த அளவுக்கு பயன்பட்டு வருகிறது என்று சொல்லப்படுமானால், அதற்குக் காரணம் இந்த மாதிரி “சின்னப் பையன்களே!”. இப்படிப்பட்ட சின்னப் பையன்கள் இருப்பதனாலேயேதான் சின்னப்பையன் தன்மை எனக்கு இன்னமும் இருந்து வருகிறது.
என் ஆசை எல்லாம் நான் எப்பொழுதும் சின்னப்பையன்கள் மாதிரியே இருக்க வேண்டும் என்பதோடு, பெரிய ஆள் மாதிரி இருக்கக் கூடாது என்பதுமாகும்.” - தந்தை பெரியார் (‘குடிஅரசு’, 10.1.1948)
குறிப்பு: பயிற்சி மாணவர்களே, உங்களைத்தான் பெரியார் நேசிக்கிறார் ஏன், எதிர்பார்க்கவும்
செய்கிறார்!
No comments:
Post a Comment