.....செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 30, 2021

.....செய்தியும், சிந்தனையும்....!

ஒரே நாடு - ஒரே கருத்து!

*          கருத்துச் சுதந்திரத்துக்கு இந்தியாவில் ஆபத்து - டுவிட்டர் நிறுவனம்.

>>           ஒரே கருத்து - இதில் மாற்றம் கிடையாது.

புது மாதிரி கரோனா!'

*          புதுவை சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரசிலிருந்து பா...வுக்குத் தாவியவருமான புதுச்சேரி நமசிவாயம் - டில்லியில் பா... தேசிய தலைவர் கே.பி.நட்டாவுடன் சந்திப்பு.

>>           கட்சி மாறிகளின் அரசியல்!

தாமரையின் சாதனை!

*          பெட்ரோல், டீசல் விலை 15 ஆவது முறையாக ஏற்றம்.

>>           ஆறு மனமே ஆறு இது  ஆள்பவன் கட்டளை பாரு!

எங்களப்பன் குதிருக்குள் இல்லை!'

*          பிராமணர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க சிறப்புக் கவனம் தேவை - ஆளுநருக்கு சு.சாமி கடிதம்.

>>           உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்கவேண்டும்.

இரண்டும் பிசினசே!

*           பழைமையான கோவில் இருந்த இடத்தில் பிரியாணி கடை - .பி.யில் மேயர் அதிர்ச்சி.

>>           உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!


No comments:

Post a Comment