அய்யா ஆசிரியர் அவர்கள் உரை
வா.நேரு, மதுரை
நேற்றைய தொடர்ச்சி....
வர்ணம் பிறவி அடிப்படையிலே நிர்ணயிக்கக்கூடியது.வகுப்புகளிலிருந்து வெளியேறலாம்.உள்ளே போகலாம். முன் னேறலாம். கீழ்ப்படி நிலைக்கு வரலாம்.ஆனால் வர்ணம் என்பது இருக்கிறதே,ஒரு முறை அந்த ஜாதியிலே பிறந்து விட்டால், மதங்கள் மாறுவதற்கு கூட உரிமை உண்டு, ஜாதி மாறுவதற்கு உரிமை கிடையாது. அந்த ஜாதியிலே உயர் ஜாதிக்காரனுக்கு வசதி உண்டு, அந்த ஜாதியின் காரணமாக தாழ்த்தப் பட்டு, பிற்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அடிமைப் படுத்தப்பட்டு இருக்கக்கூடிய மற்றவர்களுக்கு அந்த வருண தர்மம் எனப திலே எது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ, அதிலிருந்து அவர்கள் நகரக்கூடாது என்று ஒரு காலங்காலமாக நிலைத்த ஒரு சமூக அநீதியை எதிர்த்துத்தான் சமூக நீதி என்ற போர்க்கொடி தூக்கப்பெற்றது. அந்த சமூக நீதிக்கொடியை உயர்த்திய இயக்கம்தான் திராவிடர் இயக்கம்.அந்த திராவிடர் இயக்கத்தின் முன்னணி என்பது இருக்கிறதே அது மிக முக்கியம்.
இங்கு 1967இல் இருந்து 50 ஆண்டுகளை ஆய்வு செய்திருக்கிறார்கள். அதற்கு அடுத்த தலைப்புகளையும் சொல்லிவிட்டு அடுத்த செய்திகளுக்குச் செல்லலாம் .நேரம் குறுகிய காலம்.அடுத்தது “Broadening Growth and Democratising Capital “.அதே மாதிரி வளர்ச்சி என்பது இருக்கிறதே அது ஒரு பக்கத்திலே மட்டும் வளர்ச்சியடைந்தால் அது வளர்ச்சி அல்ல,அது வீக்கம்.அதைப் பரவலாக்க வேண்டும்.வளர்ச்சி வேறு.வீக்கம் வேறு.அதுதான். பணமே-அது அதிக அளவிற்கு வரும்போது பண வீக்கம்,Inflation என்பதற்கு என்ன சொல்லைத் தமிழிலே பயன்படுத்து கிறோம் என்றால் பணவீக்கம் என்றுதான் சொல்கின்றோம். பண வளர்ச்சி என்று அதற்குப் பொருள் அல்ல. Growth நிக்ஷீஷீஷ்tலீஎன்பது வளர்ச்சி. வீக்கம் என்பது இருக்கிறதே அது வித்தியாசமானது. உடல் முழுவதும் வளர்ந் தால் அது வளர்ச்சி.ஒரு குறிப்பிட்ட பாகம் மற்றும் வளர்ந்தால் அது வீக்கம்.ஆகவேதான் அதனை தெளிவாகச்சொல்லி ,வளர்ச்சி வேண்டு மென்றால் என்ன செய்யவேண்டும், என்ன செய்திருக்கிறார்கள், என்பதற்கு அடையாளமாக பல்வேறு மாநிலங்களை ஒப்பிட்டு, மிக அருமையான அளவிற்கு சொல்லுகிற தலைப்பு “Broadening Growth and Democratising Capital” என்பதாகும்..
அடுத்தபடியாக நமது நாட்டிலேயே நகரம்,கிராமம் வேறுபாடு.இதைக்கூட தந்தை பெரியார் கிராம சீர்திருத்தம் என்ற அற்புத மான ஒரு சிறிய நூலிலே தெளிவாகச் சொன்னார். நகரம், கிராமம் என்ற பேதம் இருக்கிறதே அது, பிராமணன் ,சூத்திரன் என்ற பேதம் இருக்கிறதே அது மாதிரியானது, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் மாதிரி யானது ,ஒருவர் உழைப்பிலே இன்னொருவர் வாழக்கூடிய அந்தச் சூழல் என்பது தவறு, எனவேதான் இந்த பேதமே நகரம்,கிராமம் என்ற பேதமே இருக்க்க்கூடாது என்று மிக நீண்ட காலத்திற்கு முன்னரே பெரியார் இந்தத் தத்துவத்தை எடுத்துச்சொன்னார்.எனவே “Transforming Rural Relations”, என்பது, அதனை மாற்றிக் காட்டவேண்டும் சமுதாய அடிப்படையிலே என்று எடுத்துக் காட்டுவதுதான் இந்த இயல்..
ஏழாவது இயல்“Popular Interventions and Urban Labour “. .அதன் மூலம் எப்படி யெல்லாம் இடையூறுகள் ஏற்பட்டு ,மிக முக்கியமான மாறுதல்கள் ஏற்பட்டு இருக் கின்றன என்று சொல்லி அதிலே எப்படிப்பட்ட சூழல்கள் ஏற்படக்கூடும். இடையூறுகள் அல்லது அளவீடுகள் அதற்கு எல்லைக்கோடுகள் இவை எல்லாம் என் னென்ன நிகழ்வுகள்,வரக்கூடிய வாய்ப்புகள் இவற்றை எல்லாம் கடைசியாக, @Fissures,Limits and Possible Futures என்று எட்டாவது தலைப்பிலே எழுதியிருக்கிறார்கள்.
எனவே நண்பர்களே, இதிலே மிக முக்கியமானது,சுட்டிக்காட்ட வேண்டிய செய்திகளை எல்லாம் எடுத்துச்சொல்லியிருக் கிறார்கள் என்றாலும், இந்த நூலை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த நூல் ஏற்கெனவே அறிமுகமாகியிருக்கிறது அறி முகம் என்பதன் மூலமாக ஒரு தொடர்பைக் காட்டுகிறோம். எனவே நூலுக்குள்ளே போய் ஒவ்வொன்றாக ஆய்வு செய்வதென்றால் அவ்வளவு ஆழமான செய்தி இருக்கிறது.நீங்கள் இந்த நூலை வாங்கிப் படிக்கவேண்டும். ஆங்கில அறிவும் வாய்ப்பும் உள்ளவர்கள் படிக்கவேண்டும்..நிச்சயமாக இது தமிழிலே வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.விரைவில் இது தமிழில் கிடைக்கும். கிடைக்க வேண்டும். அதற்கு வேண்டிய முயற்சி களைச் செய்ய வேண்டும். என்பதும் என்னுடைய அன்பான வேண்டுகோள் ஆகும்.
அருமை நண்பர்களே, முதலில் ஒரு செய்தியைச் சொல்லவேண்டும்.அது என்ன.. திராவிடியன் மாடல்..முதல் கேள்வியே அது தான் இந்தப்புத்தகத்தில்.திராவிடியன் மாடல் என்னும் பெயர் ஏன் வந்தது?ஏப்படி வந்தது?.திராவிட மாடல் என்றால் அப்போது இன்னொரு மாடல் என்ன என்று வருகின்ற போது நண்பர்களே,வித்தியாசம் இருக்கிறது. நம்முடைய நாட்டிலே திராவிடம் என்ற பெயரைக் கேட்டாலே சில பேருக்கு ஒவ்வாமை. சில பேருக்கு அவசரம்.சில பேர் அதனை திசை திருப்புவதற்கு. காலம் காலமாக நமது பாரம்பரியம் நாகரிகம் எல்லாம் திராவிடம்தான்..பார்ப்பனரல்லாதார் இயக்கம் முதலில் சவுத் இந்தியன் லிபரல் பெடரேசன் என்று 1916களில் அந்த அமைப்பு நடந்த போது,அந்த அமைப்பு நடத்திய ஒரு பத்திரிகை ஜஸ்டிஸ்.அந்தப் பத்திரிக்கை பெயரிலேயே நீதிக்கட்சி..நீதிக்கட்சி என்ன வென்றால் திராவிடர் கட்சி.அதற்கு முன் னாலேயே அதனை உருவாக்கியவர்கள்.காலங்காலமாக கல்வியிலே அதன் மூலமாக அரசுப்பணிகளிலே ,மற்ற இடங்களில் எல்லாம் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அதன் மூலம் பொருளாதாரத்திலே அவர்கள் ஒரு சிறப்பான வாழ்க்கையைப் பெறமுடியாத வர்களாக ,பெரும்பாலான மக்கள்,அதுவும் இந்த மண்ணுக்கு உழைக்கின்ற மக்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து, அவர்களுக்கு கல்வியைக் கொடுப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதற்காக முன் னோடிகளாகத் துவக்கியவர்கள்.
ஓர் உதாரணத்தை,புத்தகத்தின் உள்ளே மிக அழகாக எடுத்து சுட்டிக்காட்டி இருக் கிறார்கள். 1912-லே நீதிக்கட்சி ஆரம்பிப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னால், டாக்டர் சி.நடேசனார் திராவிடன் ஹோம் -திராவிடன் இல்லம் என்று ஒன்றை ஆரம்பித்தார். திராவிடர் இல்லம் என்பது ஒரு விடுதி.திருவல்லிக்கேணியிலே ஆரம்பிக்கப்பட்டது. .வாய்ப்பு இல்லாதவர்கள் எல்லாம் அதிலே தங்கிப் படித்தார்கள்.சர்.ஆர். கே.சண்முகம் போன்றவர்கள் அங்கே இருந்தார்கள்.பிற்காலத் திலே உலகம் புகழும் பொருளாதார நிபுணராக வந்தவர் ஆர்.கே.சண்முகம்.அப்படிப்பட்டவர்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலே இருந்து வரக்கூடியவர்கள், படிக்கக்கூடாதவர்கள் என்று சொல்வதற்கு அடிப்படை மனுதர்மம். மனுதர்மத்தின் அடிப்படையில் வரக்கூடியது. எனவேதான் ஜாதி என்னும் அடிப்படையில் ஏன் என்ப தனை முதலிலேயே இந்த நூலில் சுட்டிக்காட்டி யுள்ளார்கள். ஜாதி அடிப்படையில் ஒரு சமுதாயம் ஏற்கெனவே இருக்கிறது..திராவிட மாடலுக்கு எதிரான ஒன்றைச் சொல்லவேண்டுமென்றால் அது மனு.திராவிட மாடல் சமதர்மம்,அது குல தர்மம்.இதுதான் மிக முக்கியமானது.குலம் என்று சொல்கின்ற நேரத்திலே ,அதனை நாம் உருவாக்கவில்லை.திராவிட்த்திற்கு அது நேர் எதிரானது.இதிலே நாம் திராவிடம் என்று சொல்கின்றபோது சில பேர் ஒவ்வாமை கொண்டவர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள்,?.அது என்னங்க திராவிடம் என்பது ,ஒரு கிறித்துவர் வந்தாரு, கால்டுவெல் வந்தாரு,அவரு திராவிடம் என்ற பெயரைக் கொடுத்தார் ,அதைப் பிடிச்சுகிட்டு இவங்க திராவிடம்,திராவிடம் என்று சொல் கிறார்கள் என்று இங்கு இருக்கும் சில குழப்பவாதிகள் புரியாமல் சொல்கிறார்கள்.
திராவிடம் என்பது வெறும் இனப்பெயர் என்று மட்டும் நினைக்கக்கூடாது.மொழி, பண்பாடு,கலாச்சாரம்,உரிமை வேட்கை,சமூக நீதி, சமத்துவம் இவை.எல்லாவற்றையும் உள்ளடக்கியது திராவிடம்.எனவே இது திடீரென்று யாரோ கொடுத்த பெயர் அல்லது பெரியார் கொடுத்த பெயர் என்று நினைத்துக் கொண்டு,பெரியார் மீது இருக்கிற கோபத்திலே இதைப் பேசுகிறார்கள்.அல்லது திராவிட இயக்கத்தின் மீது ,அறிஞர் அண்ணாவின் மீது அல்லது மற்றவர்கள் மீதோ இருக்கக்கூடிய அந்த வெறுப்பிலோ, கோபத்திலோ, எரிச்ச லிலோ சொல்கிறார்கள். அதைப் பற்றியெல் லாம் கவலைப்படாமல் திராவிட மாடல் என்ற ஒரு அருமையான தலைப்பை எடுத்து மிகச்சிறப்பான வகையிலே கொடுத்திருக் கிறார்கள். தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக் கிறார்களே,அதற்குத்தான் சொன்னேன், துணிவு வேண்டும் என்று தகவலுக்காகச் சொல்கின்றேன்,ஏனென்றால் பலபேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.திராவிடம் என்ற சொல், முதன்முதலில் கால்டுவெல் அவர்களால்தான் சொல்லப்பட்டது என்று சொல் கிறார்களே, அந்தக் கூற்று உண்மையா?.அருள் கூர்ந்து புரிய வேண்டும்.திராவிட மாடல் என்று சொல்வதற்கு முதலில் திராவிடம் என்று சொல்கின்ற போது மொழி, பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம், சமூக அமைப்பு என்று எல்லாமே இருக்கிறது என்றாலும் இந்தத் திராவிடம் என்ற சொல் வரலாற்று ரீதியாக இருக்கிறது. அதுதான் தந்தை பெரியார் சொன்னார்.பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று சொல்லப்பட்ட அந்த நேரத்திலே பெரியார் தான் சொன்னார். அது என்னய்யா 100க்கு 3 பேரா பார்ப்பனர்கள் இருக்கிறார்கள், அதனை ஏன் நாம் நெகட்டிவ் டெபனிசனாக கொடுக்கவேண்டும்.பெரும்பான்மை யான மக்களுக்கு என்று ஒரு முகவரி இல்லையா?..அதனுடைய ஆழமான கருத்து என்ன வென்றால் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் -சிந்து வெளி நாகரிகத்திலிருந்து திராவிட நாகரிகம், திராவிட மொழிக்குடும்பம், என்று மொழி பண்பாடு என்று எல்லாவற்றிலுமே இருக்க்க்கூடிய அந்த வாய்ப்புகள் பெற்றிருக் கிறது என்பதற்கு அடையாளமாகத்தான் இருக்கிறது என்பதைச் சொல்லிவிட்டு தந்தை பெரியார் சொன்னார்.திராவிடம் என்பது வெறும் வரலாற்றில் மட்டுமல்ல,நீங்கள் எழுதி வைத்திருக்கிற புராணத்திலும் மனு தர்மத் திலுமே இடம் பெற்றிருக்கிறதே என்று சொன்னார்.இது பலபேருக்குத் தெரியாது.
இதோ என் கையில் இருப்பது மனுதரும சாஸ்திரம்.இந்த நூல் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் வந்தது.1919இல் வெளிவந்த நூல்.102 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனை அப் படியே எடுத்து அசல் மனுதர்மம் என்ற பெயரிலே வெளியிட்டு இருக்கிறோம்.பல பதிப்புகள் கண்ட நூல் இது.இந்த அசல் மனுதர்மம் நூலிலே இருக்கக்கூடிய 10ஆவது அத்தியாயத்தில் 44ஆம் சுலோகத்திலே சொல் கின்றார்கள்.
“பௌத்திரம், அவின்றம், திராவிடம், கம்போசம்,யவனம், சகம், பாரதம், பால்தீகம், சீனம், பிராதம், கஷ்டம் ..என்று.மேற்கண்ட தேசத்தில் ஆண்டவர்கள் எல்லோரும் சூத் திரர்கள் என்று ஆகிவிட்டார்கள் என்று சுலோகம் சொல்கிறது. ஆகவே இது மனுதர்ம காலத்திலிருந்து வந்திருக்கிறது. மனு எப்போது ஆரம்பித்து வந்தது என்பதற்கு அவர்களே பதில் சொல்லட்டும்.ஆகவே இதை எதற்காகச் சொல்கிறேன் என்று சொன்னால் யாரையும் சங்கடப்படுத்த அல்ல.திராவிடம் என்பது வரலாற்று ரீதியாகவும் இருக்கிறது.புராண ரீதியாகவும் இருக்கிறது.இன்னும் கேட்டால் பாகவத புராணங்கள் போன்றவற்றில் திராவி டம் என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது.இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக் கின்றன.
இந்தத் திராவிட மாடல் என்று சொல்கிற போது ,அதற்கு என்ன தனித்தன்மை?.அனைவருக்கும் அனைத்தும் அதுதான் தனித்தன்மை.இதிலே பிரிப்பது இல்லை.பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே,யாவரும் கேளிர், எல்லோரும் உறவினர், அந்த உறவு, இதிலே பேதப்படுத்துவதில்லை.பேதப்படுத்துவதற்கு,வேற்றுமைப்படுத்துவதற்கு இடமேயில்லை.இப்போது எல்லாம் மிக நாகரிகமாக ,அறிவார்ந்து பேசக்கூடிய ஆங்கில புலமை படைத்தவர் என்று சொல்கிறபோது, வளர்ச்சி என்று சொல்கின்ற போது, inclusive growth, exclusive growth என்று இரண்டைச்சொல்கிறார்கள்.
அதாவது எல்லோரையும் ஒருங் கிணைத்து, அரவணைத்து செல்லக்கூடிய ஒரு வளர்ச்சி.அது inclusive growth. மக்களைப் பிரித்து, மக்களை ஜாதிகளால், மதத்தால், மற்றவைகளால் பிரித்து, பிரித்து அதன் மூலம் கிடைக்கக் கூடிய வளர்ச்சி அது exclusive growth. Dravidian model is an inclusive philosophy.Dravidian growth itself is a humanist.Human approach,humanisationஇதிலே யாரும் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் என்று இல்லை. எல்லோருக்கும் எல்லாமும், Equal Opporunity,Equality. சமத்துவம் என்பதுதான் திராவிடத் தத்துவம்.அந்த சமத்துவத்தை அடிப்படை யாகக் கொண்டு செயல்பட்டது திராவிட மாடல். இதற்கு முன்னால் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை.அதுக்கு பெரிய அளவிற்குப் போகவேண்டாம். இந்தப் புத்தகத்தில் இருக்கிற இரண்டே இரண்டை எடுத்துக் கொள்ளலாம் - நேரத்தைக் கருதி.
(தொடரும்)
No comments:
Post a Comment