கோவை மருத்துவமனையில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 31, 2021

கோவை மருத்துவமனையில்

 கரோனா சிகிச்சைப் பிரிவுக்கு கவச உடையில் சென்று முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஆய்வு

கோவை, மே 31 நேற்று (30.5.2021) கோவை மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவுக்கு கவச உடையில் சென்று முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளிடம் தேவைகளை அவர் கேட்டறிந்தார்.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளி களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து வரும் முதலமைச்சர் மு..ஸ்டாலின் கடந்த 20 ஆம் தேதி சேலம், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் 21 ஆம் தேதி ஆய்வு செய்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.

அரசின் தீவிர நடவடிக்கையால் தலைநகர் சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்த நிலையில், கோவையில் தொற்று அதிகரித்து முதலிடத்தை பெற்றது. இதனால் அங்கு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (30.5.2021) கோவை சென்றார்.

முன்னதாக ஈரோடு சென்ற முதலமைச்சர் மு..ஸ்டாலின் பெருந்துறையில் உள்ள ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மய்யத்தை பார்வையிட்டார்.

அப்போது அங்கிருந்த தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளிடம், உங்களின் ஒத்துழைப்பால்தான் கரோனாவை கட்டுப்படுத்த முடிகிறது. உங்களின் சேவை மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதலமைச்சர் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டு உள்ள 5 மருத்துவர்கள் மற்றும் 5 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன உத்தரவை முதலமைச்சர் மு..ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் காரில் புறப்பட்டு திருப்பூர் சென்றார்.

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத் துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சைப் பிரிவை மு..ஸ்டாலின் திறந்து வைத்தார். பின் னர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயா ளிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவின் தரத்தை அவர் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து 20 கார் ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த கார் ஆம்புலன்சில் ஆக்சிஜன் வசதி இருப்பதால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து 6 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

திருப்பூரில் ஆய்வு செய்த மு..ஸ்டாலின், பின்னர் கோவை வந்து .எஸ்.அய். மருத் துவமனையில் உள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், கரோனா பிரிவில் ஆய்வு மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார். இதை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள், சிறிது தயங்கினர்.

ஏனெனில் கரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்றால் முழு கவச உடை (பி.பி.. கிட்) அணிந்து மட்டுமே செல்ல வேண்டும்.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அவருக்கு முழு கவச உடை வழங்கப்பட்டது.

அந்த உடையை அவர் தான் அணிந்து இருந்த வேட்டி, சட்டையின் மேல் அணிந்து கொண்டார். அந்த ஆடையை அணிந்து கொள்ள உதவியாளர் ஒருவர் அவருக்கு உதவி செய்தார். அத்துடன் அவர் கையுறை மற்றும் பிரத்யேக கண் கண்ணாடி ஆகியவற்றையும் அணிந்து கொண்டார்.

பின்னர் மு..ஸ்டாலின் அங்குள்ள ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய கரோனா தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கரோனா சாதாரண சிகிச்சைப் பிரிவுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்ததுடன், முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? சத்தான உணவு வழங்கப்படுகிறதா? ஏதேனும் குறைகள் உள்ளதா? என்று கேட்டறிந்தார்.

தங்களைப் பார்க்க வந்திருப்பது முதல மைச்சர் மு..ஸ்டாலின் என்பதை அறிந்த நோயாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment