தொகுதி மக்கள் குறைகளைத் தெரிவிக்க எளிய முறைஎழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் அறிமுகம்!
தமிழர் தலைவரிடம் செயல்விளக்கம்
சென்னை, மே 30 வணிக நிறுவனங்களும், தொலைத் தொடர்புத் துறையினரும் மட்டுமே பயன்படுத்தி வந்த வாட்ஸ் அப் பாட் (கீலீணீtsகிஜீஜீ ஙிஷீt) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிய முறையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் பணியினைத் தொடங்கியுள்ளார் சென்னை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் இ.பரந்தாமன். மக்கள் பிரதிநிதி ஒருவர் இப்படி வாட்ஸ் அப் பாட்டைப் பயன்படுத்தி குறைதீர்க்கும் முறையை அறிமுகப்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
நேற்று (29.5.2021) பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவரைச் சந்தித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், அத் திட்டம் செயல்படும் விதத்தினை அவரிடம் விளக்கினார்.
எழும்பூர் எம்.எல்.ஏ. புகார் எண் +91 99409 40405 என்று வழங்கப்பட்டிருக்கும் வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந் தகவல் மூலம் தொடர்பு கொண்டால், தமிழ், ஆங்கிலம் இரண்டில் ஒரு மொழியைத் தேர்வு செய்யலாம்.
அதனை உறுதி செய்தபின், பெயர், அதனைத் தொடர்ந்து புகாரா? அல்லது கருத்தா எனக் கேட்டு அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும். பின்னர் என்ன அ.கு.எண், எந்த பகுதி () என்று கேட்டு, பதிவு செய்தபின்,
1. மாநகராட்சி (சிஷீக்ஷீஜீஷீக்ஷீணீtவீஷீஸீ)
2. குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் கீணீtமீக்ஷீ ணீஸீபீ ஷிமீஷ்ணீரீமீ ஙிஷீணீக்ஷீபீ)
3. மின்சார வாரியம் (ணிறீமீநீtக்ஷீவீநீவீtஹ் ஙிஷீணீக்ஷீபீ)
4. மற்றவை இவை நான்கில் எது தொடர்பான புகார், என்ன புகார், அதற்கான ஒளிப்படம் ஏதேனும் இருந்தால் அதையும் இணைப்பதற்கான வாய்ப்பு அனைத்தையும் வழங்குகிறது.
இது தொடர்பாக மேலும் விவரித்த சட்டமன்ற உறுப்பினர், புகாரைப் பதிவு செய்தபின் அது தொடர்பான தொடர் செயல்பாடுகள் தொடங்கும் என்றும், தெரிவித்த புகார் தொடர்பான செய்திகள், தொடர் நடவடிக்கைகள புகாரளித்த வருக்குத் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மக்களின் குறைகளைத் தீர்க்கும் இந்த முயற்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டுத் தெரிவித்ததோடு, பெரியார் திடல் அமைந்துள்ள சட்டமன்றத் தொகுதியில் இச் செயல்பாடு அறிமுகப் படுத்தப்பட்டிருப்பதற்கு
தனது மகிழ்ச்சியையும்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment