கொள்கை வீரர் மிசா பொன்.இராமகிருஷ்ணன் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 29, 2021

கொள்கை வீரர் மிசா பொன்.இராமகிருஷ்ணன் மறைவு

தமிழர் தலைவர் இரங்கல்-வீரவணக்கம்மானமிகுமிசா' பொன்.இராமகிருஷ்ணன் அக்கால திராவிடர் இயக்கத் தீவிர கொள்கை வீரர். இறுதி வரை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் நம்மிடமும் தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களிடமும் மாறாத அன்பும் பற்றும் கொண்டவர். அவருக்கு நாமும் மறைந்த கழகப் பொருளாளர் மானமிகு கோ.சாமிதுரை அவர்களும் தியாக துருகத்தில் பெரிய பாராட்டு விழா நடத்தி னோம். அவரது மறைவு ஈடு செய்ய இயலாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தி.மு.., தி.. கொள்கை குடும்பத்தவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும். அவருக்கு நமது வீர வணக்கம்.

 (கி.வீரமணி)

தலைவர்,

திராவிடர் கழகம்

29.5.2021            

சென்னை       

No comments:

Post a Comment