தொழில் நுட்பம்உலக நாடுகள் கரோனாவின் கோரத் தாண்டவத்திலிருந்து இன்னும் மீளவில்லை.
பல
நாடுகளிலும் கரோனா இரண்டாவது,
மூன்றாவது
அலை தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில்
ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை இலகுவால் கண்டு
பிடிக்கும்
பல முயற்சிகளில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
கரோனாவால்
பாதிக்கப்படும் குறிப்பிட்ட சதவிகித நோயாளிகள் எவ்வித
அறிகுறிகளையும்
வெளிப்படுத்தாத கரோனா
தொற்றாளர்களாக உள்ளனர்.
அவர்களுக்கு
கரோனா பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்துவது பெரும் கடினமான பணியாக
உள்ளது.
கரோனாவை
கண்டறிய தற் போது பல சோதனை முறைகள்
பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது ஆர்.டி.பி.சி.ஆர்.
சோதனை.
ஆனால்
இதில் முடிவுகள் தெரியவர சில மணி நேரங்கள் வரை ஆகும். அதற்குள் அந்த நபர் பலருக்கு கரோனாவை
பரப்பி விடுகிறார்.
இந்நிலையில்
நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கரோனாவை எளிதில் கண்டறிய புதியதொரு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள
ஆராய்ச்சியாளர்கள்
தேனீக்களுக்குப் பயிற்சி அளித்து, அதன் நுகர் திறன் மூலம் கரோனாவை கண்டறிய முடிவதாக தெரிவித்துள்ளனர்.
இதன்
மூலம் ஒரு சில நொடிகளில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிந்துவிட முடிவதாக
ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
விலங்குகள்
மூலம் கரோனாவை கண்டறிய எடுக்கப்படும் முதல் முயற்சி இது இல்லை.
ஏற்கெனவே
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நாய்களின் மோப்ப சக்தி மூலம் கரோனாவை கண்டறியும் ஆய்வில்
ஈடுபட்டனர். நாய்கள் 94வீதம் வரை கரோனாவை
சரியாகக்
கண்டறிவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment