நமது நாடு மனுதர்மம் ஆண்ட நாடு; ஆளும் நாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 29, 2021

நமது நாடு மனுதர்மம் ஆண்ட நாடு; ஆளும் நாடு

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவான இந்திய அரசியல் சட்ட அமைப்பின் இடத்தை மனுதர்மம் பிடிக்க முயலும் நாடு;

அதில் உள்ள மனுதர்மம் என்பது சமூக அநீதி மட்டுமல்ல;

பொருளாதார அநீதி மட்டுமல்ல;

அரசியல் அநீதி மட்டுமல்ல -

அதற்கும் கீழான மோசமான  நிலையில்

மனித உரிமைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் -

கொடுமையான கொடுமைகள் பாதிப்பும் ஆகும்.

வர்க்கம் என்பது மேலை நாடுகளில் தனி;

வருணம் கிடையாது

(இப்போது சில நாடுகளில் தொற்று நோய் போல் புலம் பெயர்ந்து  வந்தும் குடியேறியவர்களும் பரப்பும் நோய் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது.)

ஆனால்

இந்தியாவில் -

மனுதர்மப்படி நடக்கும் ஆட்சியில்,

ஜாதி தர்மம் இன்றும் கொடி கட்டிப் பறக்கிறது.

ஒருவன் பொருள் சேர்க்கவோ சம்பாதிக்கவோ கூட உரிமையற்றவனாக்கிய நாடு. அவன் சேர்த்த பணத்தை வன்முறையால் பயன்படுத்திக் கூட உயர்ஜாதியான் பறித்துக் கொள்ளலாம் என்பதே தர்மம்.

கீழேவுள்ள மனுதர்ம வாக்கியங்களே இதற்கு மறுக்க முடியாத சான்றுகளாகும்.

சூத்திரனுக்கு தர்மம் - பணி செய்வதே!

சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றிப் பணி செய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார்.

இதனால் அவனுக்கு தானம் முதலியவை யுண்டென்று தோன்றுகிறது.

சம்பளம் கொடுத்தும், கொடுக்காமலும் வேலைவாங்கலாம்...

பிராமணன் சம்பளம் கொடுத்தேனுங் கொடாமலேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம்.

ஏனெனில், அவன் பிராமணன் வேலைக்காகவே பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றானல்லவா!

சூத்திரன் யஜமானால் வேலையினின்று நீங்கப்பட்டிருந்தாலும் அந்த வேலையானது அவனை விட்டு நீங்காது.

இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமாக அவனுடன் பிறந்த அந்த வேலையை எவன்தான் நீக்குவான்?

ஆதலால், அவன் மறுமைக்காகவும், பிராமண சிசுருஷை செய்ய வேண்டியது.

சூத்திரன் என்றால் பெருமையா?

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்,

பக்தியினால் வேலை செய்கிறவன்,

தன்னுடைய தேவடியாள் மகன்,

விலைக்கு வாங்கப்பட்டவன்,

ஒருவனால் கொடுக்கப்பட்டவன்

குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்,

குற்றத்திற்காக வேலை செய்கிறவன்,

எனத் தொழிலாளிகள் எழுவகைப்படுவர்.

 

சூத்திரனுக்கு எதுவும் சொந்தமில்லை

மனையாள் பிள்ளை வேலைக்காரன், இவர்களுக்கு பொருளில் சுவாதீனமில்லை. இவர்கள் எப்பொருளைச் சம்பாதித்தாலும் அவை அவர்களின் எஜமானையே சாரும்.

அதாவது எஜமான உத்தரவின்றி தரும விஷயத்திற்கும் தங்கள் பொருளைச் செலவழிக்கக் கூடாதென்று கருத்து.

சூத்திரன் பொருளை எடுத்துக் கொள்ளலாம்

பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழு வகைத் தொழிலாளியான சூத்திரடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம்.

யஜமானனெடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரரல்ல.

பிராமணனையே தொழ வேண்டும்

சூத்திரன் சுவர்கத்திற்காவது, ஜீவனத்திற்காவது அல்லது இரண்டிற்குமாவது, பிராமணனையே தொழ வேண்டும். இவன் பிராமணனையடுத்த சூத்திரனென்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம்.

ஆதலால், பிராமணனை உபசரிப்பதே சூத்திரனுக்கு எல்லாத் தொழிலையும் விட மேலான தருமமென்றும், மற்றவையெல்லாம் பயனில்லாதவை யென்றும் கரும காண்டத்திற்கு சொல்லியிருக்கிறது. ஆனால், இங்கு அவனுக்குப் பிராமண சிசுருஷையை துதி செய்த விஷயமேயன்றி மற்றதை நிந்திக்கிற விஷயமன்று.

பிராமணனும் தனக்கு வேலை செய்கிற சூத்திரன் சக்தியையும் அவன் செய்யும் பணிவுடைமையையும் அவன் காப்பாற்ற வேண்டிய குடும்பத்தையும் யோசித்து ஜீவனத்திற்குத் தக்கபடி கூலியேற்படுத்த வேண்டும்.

சூத்திரன் அதிகம் பொருள் சம்பாதிக்கப்படக்கூடாது.

சூத்திரன் பொருள் சம்பாதிக்கத் தக்கவனாயிருந்தாலும் குடும்பத்திற்குபயோகமானதை விட மிகவுமதிகப் பொருளை சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித்தால் தன்னாலுபசரிக்கத்தக்க பிராமணாளையே ஹிம்சை செய்ய வேண்டி வரும்.

மேலே காட்டியவை, பொருளாதாரத்தில் வறுமைக்கும் ஏழ்மைக்கும் கீழ்ஜாதியான் ஆட்பட மூலகாரணமே - வர்ணாசிரம தர்மப்படியேதான். வர்க்கத்தை கூட வருணம்தான் நிர்ணயிக்க முக்கியக் காரணியாக இருந்தது என்பது விளங்குகிறது அல்லவா?

நூல்: தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் தொகுதி 1

.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

No comments:

Post a Comment