பணம் இருந்து என்ன பயன்?
* எம்.பி. நிதிக்கு தடுப்பூசி ஒதுக்கமாட்டோம் என்பதா? சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்.
>> கரோனாவைத் தடுக்க யாகம் நடத்தப் போகிறோம் என்று கேட்டிருந்தால், ஒருக்கால் இசைந்திருப்பார்கள்.
மனிதர்க்கழகு பகுத்தறிவே!
* மத்திய பா.ஜ.க. அரசு ஆர்.எஸ்.எஸ். கொள்கை யின் அடிப்படையில் பகுத்தறிவுச் சிந்தனைகள்மீது தாக்குதல் தொடுக்கின்றன.
- சீதாராம் யெச்சூரி,
சி.பி.எம். பொதுச்செயலாளர்
>> சாணியைப் பிடித்து வைத்து சாமி என்போர்தாமே?
ஆட்சியே சவால்தான்!
* கரோனா - 2 ஆவது அலையில் ஆக்சிஜன் விநியோகம் சவாலாக இருந்தது.
- பிரதமர் மோடி
>> அப்பாடா, ஓர் உண்மையை முதன்முதலில் ஒப்புக்கொண்டு விட்டார்.
இதற்கொரு முடிவு தேவை
* தன்னிச்சையாக தலைமைச் செயலாளரை மத்திய அரசு திரும்பப் பெற முடியாது - மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மறுக்கலாம் - சட்ட நிபுணர்கள் கருத்து.
>> மாநில அரசு என்றால் கிள்ளுக் கீரையா?
No comments:
Post a Comment