தமிழர் தலைவர் கி. வீரமணி, அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் திறந்து வைத்தனர்
மருத்துவமனையை திறந்து வைத்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழர் தலைவர் ஆசிரியர், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் பரந்தாமன், எஸ். கணேசன் அய்.ஏ.எஸ். ஆகியோர் மருத்துவமனை வளாகத்தில் மருந்துகளை பார்வையிட்டனர். அங்கு வழங்கப்பட்ட இயற்கை மூலிகை பானத்தை அமைச்சர் சுவைத்துப் பார்த்தார். (சென்னை பெரியார் மணியம்மை மருத்துவமனை, 29.5.2021)
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,
எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் பரந்தாமன் ஆகியோர்க்கு இயக்க நூல்களை வழங்கி தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். (29.5.2021)
சென்னை, மே 29 சென்னை பெரியார் திடலில் அமைந்திருக்கும் பெரியார் மணியம்மை மருத்துவ மனையில், தமிழ்நாடு அரசு சித்தமருத்துவம், கரோனா தடுப்பு சிகிச்சை மய்யத்தை இன்று (29.5.2021) காலை 10 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதிமாறன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
சென்னை பெரியார் திடலில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி, இப்பகுதி ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் எவ்வித வேறுபாடும் பார்க்காமல், மருத்துவ உதவிகள் வழங்கிவரும் பெரியார் மணியம்மை மருத்துவமனை என்ற இலவச மருத்துவமனையை கரோனா கொடுந் தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க - தமிழக அரசின் மருத்துவத்துறை எப்படி, எந்தப் பிரிவுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ, அப்படிப் பயன்படுத் திக் கொள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். துடிப்போடு விரைந்து செயல்படும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களும் மிக்க மகிழ்ச்சியுடன் இந்த யோசனையை - வேண்டுகோளை ஏற்று மருத்துவ மனையைத் தக்க வகையில் பயன்படுத்திக் கொள்ள அரசின் சார்பில் முன்வந்தார்.
இதையொட்டி சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 40 படுக்கை வசதிகள் கொண்ட தமிழ்நாடு அரசு சித்த மருத்துவம் - கரோனா தடுப்பு சிகிச்சை மய்யம்(Siddha - Based Covid Care Centre) அமைக்கப்பட்டு இன்று (29.5.2021) காலை 10 மணியளவில் திறப்பு விழா நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தமிழக அரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர் இணைந்து இம் மருத்துவ சிகிச்சை மய்யத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். எழும்பூர் சட்டமன்ற உறுப் பினர் இ. பரந்தாமன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமி யோபதித் துறை இயக்குநர் எஸ். கணேஷ் அய்.ஏ.எஸ். ஆகியோர் இந்நிகழ்வுக்கு முன்னிலை வகித்து சிறப் பித்தனர்.
இந்நிகழ்வில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோ பதித் துறை இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிச்சைய்யாகுமார், திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், முனைவர் மங்களமுருகேசன், மருத்துவர் ஆர். மீனாம் பாள், ஆடிட்டர் ஆர். இராமச்சந்திரன், மருத்துவர் தங்கம், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சு. குமாரதேவன், செயலாளர் தி.செ. கணேசன், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ. சுரேஷ், மு.ரங்கநாதன், தி.மு.க. கழக வட்டச் செயலாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி, சத்யராஜ், விஜயகுமார், சரவணகுமார், ஜாவித்முத்து மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment