செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தில் ஓராண்டில் 8 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க முடியும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 30, 2021

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தில் ஓராண்டில் 8 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க முடியும்!

 டில்லியில் மத்திய அமைச்சரை சந்தித்தபின் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை, மே 30- தமிழகத் தில் கரோனா வின் 2ஆவது அலையை கட் டுப்படுத்த, முதலமைச்சர்மு.. ஸ்டாலின் அவர்கள் பல அதிரடி நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார். தடுப்பூசிக்காக உலகளாவிய டெண்டரையும் தமிழக அரசு கோரி யுள்ளது.

இந்நிலையில் மாநிலத் துக்கு தேவையான தடுப் பூசி கள், ஆக்சிஜனை தமிழகத்தி லேயே உற்பத்தி செய்ய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. இதனை நடை முறைப் படுத்தும் விதமாக செங்கல் பட்டு மாவட்டம் திருமணி கிராமத்தில் உள்ள எச்.எல்.எல். பயோடெக் தடுப் பூசி தயா ரிப்பு நிறுவனத்தில் முதல மைச்சர் மு..ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண் டார்.

இந்த நிறுவனம் தொடர் பாக தி.மு.. நாடாளு மன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென் னரசு ஆகி யோர் புது டில்லியில் மத்திய அமைச் சர் பியூஷ் கோயலை சந்தித்து நேற்று முன்தினம் ஒரு கோரிக்கை கடிதத்தை கொடுத்துள் ளனர்.

இதைத் தொடர்ந்து, இரு வரும் செய்தியாளர் களிடம் கூறியதாவது,

"தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத் தும் விதமாக அனைத்து துரித நட வடிக்கைகளயும் முதலமைச்சர்மு.. ஸ்டாலின் எடுத்து வரு கிறார். அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி யிருந்த பரிந்துரை கடி தத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து கொடுத்துள்ளோம். அப் போது உரம் மற்றும் ரச யனத்துறை இணைய மைச் சர் மன்சூக் மாண்டவியா வும் உடனிருந்தார்.

இதையடுத்து செங்கற் பட்டில் இருக்கும் தடுப்பூசி பூங்காவை அடுத்து ஒரு வாரத்தில் செயல் படுத்து வது குறித்து அனைத்து நடவடிக் கை களும் எடுக்கப் படும் என மத்திய அமைச்சர் உறுதி யளித்துள்ளார்.

இதையடுத்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறிய தாவது:

செங்கல்பட்டு தடுப் பூசி ஆலை தொடர்பாக எங்கள் தரப்பு திட்டத்தை கொடுத் துள்ளோம். அதனை ஆய்வு செய்து விரைந்து உடனடி யாக முடிவெடுப்பதாக மத் திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்

ளார்.

இதில் தமிழக முதல மைச்சர் வலியுறுத்தலின் படி செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை செயல் பாட் டுக்கு வந்தால், அடுத்த ஆறு மாத காலத் தில் 2 கோடி தடுப் பூசி தயாரிக்க வாய்ப்பு உண்டு. மேலும்  ஆண்டு ஒன்றுக்கு 8 கோடி தடுப்பூசி வரை தயாரிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. அதேபோன்று இருக்கும் நிலையை கருத் தில் கொண்டு தமிழகத்துக்கு கூடுதல் கரோனா தடுப் பூசி வழங்க வேண்டும் எனவும் வலியுறு த்தப் பட்டுள்ளது. அதனை கேட்ட மத்திய அமைச்சர், உரிய அளவு வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment