30.5.2021
டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக பெற்ற கடும் தோல்வியை ஏற்க முடியாமல் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது அரசுக்கு பிரச்சினையை நாளும் தருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.
· குடியுரிமை திருத்தச் சட்டத்தை பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், சட்டீஸ்கர், அரியானா மா நிலங்களில் 13 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆணை பிறப்பித்ததை அசாம் மாணவர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அடித்தட்டு மக்களின் வாழ்வையும், கரோனா தொற்றின் காரணமாக உயிரை யும் பாதித்துள்ளது. 2021-2022ஆம் ஆண்டின் மிகப்பெரிய அழிவு இதுதான் என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
· இரண்டு ஆண்டுகள் ஆட்சி நிறைவுற்ற நிலையில், சாதனை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் மோடி அரசின் இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டாம் ஆண்டு கிட்டத்தட்ட கவனிக்கப்படாமல் போனதற்கு இதுவே காரணமா? என மூத்த பத்திரிகையாளர் தல்வீன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· லட்சத்தீவில் பாஜகவைச் சேர்ந்த நிருவாகியின் ஆணை களை எதிர்த்து கருத்திட்ட கேரள நடிகர் பிருத்விராஜ் சுகுமார னுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
· கடந்த ஆண்டு வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட ஜூன் 5ஆம் தேதி சம்பூர்ணா கிரந்தி திவாஸ் தினம் என்று கடைப்பிடிக்கப்பட்டு, வேளாண் சட்டங்களின் நகல் பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் அலுவலகங்களுக்கு முன் னால் வருகிற ஜூன் 5ஆம் தேதி எரிக்கப்படும் என விவசாய அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment